Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வோல்டாஸ் நிறுவனத்தின் கவுரவ தலைவராகிறார் நோயல் டாடா

வோல்டாஸ் நிறுவனத்தின் கவுரவ தலைவராகிறார் நோயல் டாடா

சுனில் டி'சோசாவின் நியமனம், நவம்பர் 12ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

டாடா குழுமத்தைச் சேர்ந்த குளிர்சாதனப் பொருள்கள் தயாரிப்பு பிரிவான வோல்டாஸ் (Voltas) நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் நோயல் டாடா, அந்நிறுவனத்தின் கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டாடா டிரஸ்ட்ஸ் தலைவரான நோயல் டாடா, டாடா குழுமத்தின் நிர்வாக வழிகாட்டுதல்களின்படி, 70 வயதை எட்டுவதையொட்டி, 2026 நவம்பர் 11-ம் தேதியுடன் வோல்டாஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் பொறுப்புகளில் இருந்து ஓய்வுபெறுகிறார். 

இதையடுத்து, நவம்பர் 12-ம் தேதி முதல் அவரை கவுரவ தலைவராக நியமிக்க நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.கடந்த 1956 நவம்பர் 12ம் தேதி பிறந்த நோயல் டாடா, வரும் 12-ம் தேதி தனது 70-வது வயதை எட்டுகிறார். இவர் 2003-ம் ஆண்டு முதல் வோல்டாஸ் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

இதற்கிடையே, வோல்டாஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக சுனில் டி'சோசா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது டாடா குழுமத்தின் நுகர்வோர் பொருட்கள் பிரிவான, டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பு வகித்து வருகிறார். 

சுனில் டி'சோசாவின் நியமனம், நவம்பர் 12ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.மேலும், வோல்டாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள சி.பி. முகுந்தன் மேனனின் பதவிக்காலம் 2027 மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. 

அவருக்குப் பதிலாக, வோல்டாஸ் நிறுவனத்தின் அறை குளிர்சாதனப் பெட்டி பிரிவின் தலைவராக உள்ள ஜெயந்த் பாலனை, 2027 மே 25ம் தேதி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நிர்வாக இயக்குநராக நியமிக்க இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பங்குதாரர்களின் ஒப்புதலுக்குப் பிறகே இந்த நியமனம் நடைமுறைக்கு வரும்.

சுமுகமான நிர்வாக மாற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், புதிய பொறுப்பு ஏற்கும் வரை ஜெயந்த் பாலன், அறை குளிர்சாதனப் பெட்டிகள் பிரிவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்புக்கான நியமனதாரர் எனப் பொறுப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதவிர, வெங்கடேசலு பழனிசாமியை 2026 நவம்பர் 12-ம் தேதி முதல் சுயாதீனமற்ற, நிர்வாகம் சாராத இயக்குநர் பிரிவில் கூடுதல் இயக்குநராக நியமிக்கவும் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

முந்தைய செய்தி
Trump defiantly posts 'MR. VETO' portrait
அடுத்த செய்தி
Overcrowded train journey turns ordeal for migrant workers

தொடர்புடைய செய்திகள்