Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வாகன மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் 'எல்ஜி'

வாகன மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் 'எல்ஜி'

இந்தப் புதிய தொழிலில் ஈடுபட நிறுவன நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம், தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த வாகனங்களுக்கான மின்னணு சாதனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான உற்பத்தியை ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சிட்டியில் உள்ள நிறுவனத்தின் 3-வது ஆலையில் தொடங்க உள்ளது.

இதன்படி, கார்களில் பயன்படுத்தப்படும் பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள், டிஜிட்டல் திரைகள், வாகனக் கணினி அமைப்புகள், இணைய இணைப்பு வசதிகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படும். மேலும், ஓட்டுநருக்கு உதவும் நவீன தொழில்நுட்பங்கள், வாகன மென்பொருள்கள் மற்றும் பிற மின்னணு உதிரிபாகங்களும் உற்பத்தி செய்யப்பட உள்ளன.


இந்தப் புதிய தொழிலில் ஈடுபட நிறுவன நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக நிறுவனத்தின் அடிப்படை விதிகளில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தத்துக்கு பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெற தபால் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.


உற்பத்திக்குத் தேவையான முதலீடுகள், சந்தைத் தேவை மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப படிப்படியாக மேற்கொள்ளப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இனால், இந்தியாவில் வளர்ந்து வரும் வாகன மின்னணுத் துறையில் புதிய வர்த்தக வாய்ப்புகளைப் பெற முடியும் என எல்ஜி நம்புகிறது.

முந்தைய செய்தி
Arunachaleshwar temple nets Rs 5.06 cr cash, 160 grams gold in offerings
அடுத்த செய்தி
Bengaluru-Thiruvananthapuram Deepavali special via Podanur

தொடர்புடைய செய்திகள்