Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கருவேல மரங்களை டெண்டர் விட வனத்துறை முடிவு

கருவேல மரங்களை டெண்டர் விட வனத்துறை முடிவு

தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் ஏலம் நடைபெற உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில், 25 மாவட்டங்களில் உள்ள சமூக காடுகளில் வளர்க்கப்பட்ட கருவேல் மற்றும் சீமைக்கருவேல மரங்களை ஆன்லைனில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.

வனத்துறை கட்டுப்பாட்டில் சமூக வனத்தோட்டங்கள் உள்ளன. இவைகளில் பெருமளவில் கருவேல், சீமைக்கருவேல் உள்ளிட்ட மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்களை அகற்றிவிட்டு புதிய மரக்கன்றுகளை நடவும், அரசுக்கு வருவாய் ஈட்டவும் பொது ஏலத்தில் விட வனத்துறை முடிவு செய்துள்ளது.

இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா, மத்திய மண்டலத்தில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் ஏலம் நடைபெறுகிறது.

அதேபோல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இந்த ஏலம் நடைபெற உள்ளது.

இந்த ஏலத்தில் காகித ஆலைகள், எம்டிஎப் போர்டு தயாரிக்கும் நிறுவனங்கள், மரக்கரி மற்றும் சாம்பிராணி தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் டன் கணக்கில் கிடைக்கும். மேலும், பொதுமக்கள், விவசாயிகள், செங்கல் சூளைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்குத் தேவையான விறகு, கரியை இடைத்தரகர்கள் இன்றி அரசிடமே நேரடியாக குறைந்த விலையில் வாங்கிக் கொள்ள முடியும்.

இந்த ஏலம் 100 சதவீதம் வெளிப்படைத்தன்மையுடன் மத்திய அரசின் 'எம்எஸ்டிசி' இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறுகிறது. அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, வரும் நவம்பர் 23-ம் தேதி முதல் டிசம்பர் 9-ம் தேதி வரை ஆன்லைன் ஏலம் நடைபெறும்.

முந்தைய செய்தி
Democrats trounce Trump's Republicans, wrest control of Senate
அடுத்த செய்தி
NPR cameras installed on Pallipalayam flyover

தொடர்புடைய செய்திகள்