Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இனிப்பு, கார வகைகள் ஏற்றுமதி 30% அதிகரிப்பு

இனிப்பு, கார வகைகள் ஏற்றுமதி 30% அதிகரிப்பு

சிங்கப்பூரிலும் திருச்சி தயாரிப்புகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரே நாளில் 2.25 டன் இனிப்பு, கார வகைகள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தயாரிக்கப்படும் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு அதிகரித்துள்ளதால், அவற்றின் ஏற்றுமதி கடந்த ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.

அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு திருச்சியில் இருந்து இனிப்பு மற்றும் கார வகைகள் அதிக அளவில் அனுப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து திருச்சி கார்கோ ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், "திருச்சி இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிநாட்டு ஆர்டர்களை அதிக அளவில் பெற்றுள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடையே திருச்சி தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் அமெரிக்கா முக்கிய ஏற்றுமதி சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்காக அமெரிக்காவுக்கு மட்டும் சுமார் 42 டன் இனிப்பு மற்றும் கார வகைகள் அனுப்பப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள துறைமுகம் வழியாக 40 அடி சரக்குக் கொள்கலன்களில் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.

சிங்கப்பூரிலும் திருச்சி தயாரிப்புகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரே நாளில் 2.25 டன் இனிப்பு, கார வகைகள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், சீஷெல்ஸ் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடிகளுக்கும் திருச்சி தயாரிப்புகள் விநியோகம் செய்யப்படுகின்றன. அந்நாட்டிலிருந்து சுமார் 500 கிலோவுக்கான ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன. மைசூர் பாகு, பாதாம் அல்வா, நெய் லட்டு, பால்கோவா, ரசகுல்லா உள்ளிட்ட இனிப்பு வகைகளும், முறுக்கு, அதிரசம், மிக்சர், வறுத்த முந்திரி உள்ளிட்ட கார வகைகளும் வெளிநாடுகளில் அதிகம் விரும்பப்படுகின்றன.

இதற்கிடையே, பால், நெய் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு இனிப்பு மற்றும் கார வகைகளின் விலையை 5 முதல் 8 சதவீதம் மட்டுமே உற்பத்தியாளர்கள் உயர்த்தியுள்ளனர்.

விமானங்களில் சரக்குகளைக் கையாளுவதற்கான இடவசதி மற்றும் சரக்குக் கட்டணங்கள் குறைக்கப்பட்டால், ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.






முந்தைய செய்தி
Personalised festive experiences boost brand loyalty
அடுத்த செய்தி
பிஎல்எஸ் பாலிமர்ஸ் பங்குகள் 65% உயர்வுடன் அறிமுகம்

தொடர்புடைய செய்திகள்