Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தண்டவாளத்தில் பிளாஸ்டிக் குழாய்கள் இருந்ததால் பரபரப்பு

தண்டவாளத்தில் பிளாஸ்டிக் குழாய்கள் இருந்ததால் பரபரப்பு
ரயில் பாதையின் குறுக்கே போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய்கள்.

தண்டவாளத்தின் குறுக்கே 3 பிளாஸ்டிக் குழாய்களும், அதன் மீது செருப்பு மற்றும் கற்களை போட்டு வைத்திருந்ததைக் கண்டு ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

திருச்சியில் இருந்து நேற்று சென்னை நோக்கி புறப்பட்ட சோழன் எக்ஸ்பிரஸ் (22676) ரயில் பகல் 12.50 மணிக்கு பூதலூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. குறைந்த வேகத்தில் ரயில் சென்றதால், தண்டவாளத்தின் குறுக்கே ஏதோ போட்டு வைத்திருப்பதை பார்த்த ஓட்டுநர்கள் உடனடியாக ரயிலை நிறுத்தினர். 

அங்கு தண்டவாளத்தின் குறுக்கே 3 பிளாஸ்டிக் குழாய்களும், அதன் மீது செருப்பு மற்றும் கற்களை போட்டு வைத்திருந்ததைக் கண்டு ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த பூதலூர் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அந்தக் குழாய்களை அகற்றினர்.

அதன்பிறகு சோழன் எக்ஸ்பிரஸ், 7 நிமிடங்கள் தாமதமாக பூதலூரில் இருந்து புறப்பட்டது. இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முந்தைய செய்தி
ஸ்டார்ஷிப், பூஸ்டரை பிடிக்க ஸ்பேஸ்எக்ஸ் திட்டம்
அடுத்த செய்தி
Force Motors to launch Traveller-based EV in Q4 FY27

தொடர்புடைய செய்திகள்