Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

E20 பெட்ரோலில் எத்தனால் அளவு 19–21% மட்டுமே: பரிசோதனையில் உறுதி

E20 பெட்ரோலில் எத்தனால் அளவு 19–21% மட்டுமே: பரிசோதனையில் உறுதி

கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் முறையான மாதிரி சேகரிப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

இ-20 (E20) பெட்ரோலில் 26 முதல் 31 சதவீதம் வரை எத்தனால் கலந்திருப்பதாகக் கர்நாடகாவில் எழுந்த புகார்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய பெட்ரோலிய அமைச்சகம், நாடு முழுவதும் பரிசோதிக்கப்பட்ட 893 மாதிரிகளிலும் எத்தனால் அளவு நிர்ணயிக்கப்பட்ட 19 முதல் 21 சதவீதத்துக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகிக்கும் இ-20 பெட்ரோல், இந்திய தர நிர்ணய அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளது.

மத்திய அரசின் கண்காணிப்பில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சேகரிக்கப்பட்ட 893 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கர்நாடகாவில் பரிசோதிக்கப்பட்ட 56 மாதிரிகளில் எத்தனால் அளவு 19 முதல் 20 சதவீதமாகவும், சராசரியாக 19.30 சதவீதமாகவும் இருந்தது.

முன்னதாக, கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் முறையான மாதிரி சேகரிப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இ-20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் மைலேஜ் 10 சதவீதம் குறையும் என்ற கணிப்புக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

எத்தனால் கலப்புத் திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.1.97 லட்சம் கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. மேலும், 316 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி தவிர்க்கப்பட்டு, 952 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ரூ.1.66 லட்சம் கோடிக்கும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
anchor- American pistachios gain popularity in luxury Diwali hampers
அடுத்த செய்தி
5,000 பேருக்கு தட்டம்மை பாதிப்பு; 1990-க்குப் பிறகு முதல் மரணம்

தொடர்புடைய செய்திகள்