Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 உயர்வு

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 உயர்வு

இன்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 ரூபாய் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ.25 ரூபாய் அதிகரித்து ரூ.12,825-க்கும் விற்பனையானது.

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் எதிரொலியாக இரண்டாவது முறையாக தங்கம் விலை உயர்வை சந்தித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 அதிகரித்தது.

தெற்காசியப் போர், கச்சா எண்ணெய் விலை மற்றும் சர்வதேச அரசியல், பொருளாதார சூழல்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்தும், அதிகரித்தும் வருகிறது. கடந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து குறைந்த நிலையில், சில தினங்களாக ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது.

கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.12,775-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராம் ரூ.200 ரூபாய்க்கும், கிலோ ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல, கடந்த செவ்வாய்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.12,800-க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 ரூபாய் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ.25 ரூபாய் அதிகரித்து ரூ.12,825-க்கும் விற்பனையானது.
அதேநேரத்தில், காலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில் மீண்டும் மதியம் ரூ.2,200 அதிகரித்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ.275 அதிகரித்து ரூ.13,100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,400 அதிகரித்துள்ளது.

இதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.210-க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் அதிகரித்து 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அமெரிக்க ஃபெடரல் வங்கி இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முன்பிருந்த அதே வட்டி விகிதத்தையே தொடரலாம் என முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

இந்த முடிவுக்கு பிறகு தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்த நிலையில், அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகளின் தாக்கத்தால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை விறுவிறுவென அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
மின் ஆற்றல் சேமிப்புக்கு ரூ.14,500 கோடி ஒதுக்கீடு
அடுத்த செய்தி
ஆவின் தொழிலாளர்களுக்கு ரூ.4.49 கோடி போனஸ்

தொடர்புடைய செய்திகள்