Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆவின் தொழிலாளர்களுக்கு ரூ.4.49 கோடி போனஸ்

ஆவின் தொழிலாளர்களுக்கு ரூ.4.49 கோடி போனஸ்

ஆவின் பணியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார் அமைச்சர் விஜயலட்சுமி. நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

பகிரவும் WhatsApp Facebook

ஆவின் தலைமையகம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் 3,002 தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 2025-26-ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.4.49 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி இதற்கான தொகையை வழங்கினார். பால்வளத் துறை இயக்குநரும், ஆவின் மேலாண்மை இயக்குநருமான சு.சிவராசு தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக முதல்வர் உத்தரவின்படி, 8.33 சதவீத போனஸ், 11.67 சதவீத கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. ஆவின் தலைமையகத்தில் பணிபுரியும் 1,106 பேருக்கு ரூ.1.56 கோடியும், மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் 1,896 பேருக்கு ரூ.2.93 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகளில் சி பிரிவில் 1,782 பேரும், டி பிரிவில் 1,003 பேரும், ஒப்பந்தப் பணியாளர்கள் 217 பேரும் அடங்குவர்.
தொடர்ந்து, ஆவின் பணியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார் அமைச்சர் விஜயலட்சுமி. நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

முந்தைய செய்தி
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 உயர்வு
அடுத்த செய்தி
கும்பகோணத்தில் ரூ.3 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

தொடர்புடைய செய்திகள்