Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.300 கோடிக்கு ஜவுளி விற்பனை - கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் குறைவு

ரூ.300 கோடிக்கு ஜவுளி விற்பனை - கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் குறைவு

தீபாவளி ஜவுளி விற்பனை வெகுவாக சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரையில் ரூ.300 கோடிக்கு ஜவுளி ரகங்கள் விற்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் குறைவாகும்.


தென் மாவட்டங்களில் மதுரை மாபெரும் வியாபார நகரமாகும். இங்கு10-க்கும் மேற்பட்ட பிரமாண்ட ஜவுளி கடைகள் உள்ளன. இதுதவிர 50 நடுத்தர ஜவுளி கடைகளும், 400-க்கும் மேற்பட்ட சிறிய ஜவுளி கடைகளும் இயங்கி வருகின்றன. மதுரை நகரில் ஜவுளி விற்பனை ஆண்டு முழுவதும் சீராக நடைபெறும். தீபாவளி பண்டிகை காலத்தில் விற்பனை களைகட்டும். ஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீபாவளி ஜவுளி விற்பனை வெகுவாக சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஜவுளி வணிகர் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் கூறியதாவது:
தமிழக அளவில் ஜவுளி விற்பனை ஆண்டுதோறும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் மாநிலம் முழுவதும் சுமார் 27 லட்சம் சதுர அடி பரப்பளவில் 40-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் திறக்கப்பட்டுள்ளது ஓர் ஆய்வில் தெரியவந்தது.


 இதில், மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 20,000 சதுர அடி பரப்பில் புதிய கடைகள் வந்துள்ளன. மதுரைக்கு உள்ளூர் மட்டுமின்றி தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள், வியாபாரிகள் ஜவுளி வகைகள் வாங்குவதற்கு வந்து செல்கின்றனர்.

 
மதுரை நகரில் இந்த ஆண்டு தீபாவளி ஜவுளி விற்பனை சுமார் 25 சதவீதம் வரை சரிந்துள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் சுமார் ரூ.400 கோடி வரை வியாபாரம் நடைபெற்றது. இந்த ஆண்டு இது சுமார் ரூ.300 கோடியாக சரிந்துள்ளது. ஜவுளி உற்பத்திக்கான பஞ்சு, நூல், சாயம் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை இந்த ஆண்டு உயர்ந்துள்ளது.

 இதன் விளைவாக உற்பத்தி செலவும் அதிகரித்ததால் ஜவுளி ரகங்களின் விலையை சுமார் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டோம். இதனால், நுகர்வோரில் கணிசமானோர் பெரிய கடைகளை தவிர்த்து, சாலையோர கடைகளை நாடி சென்றுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
மனிதனின் டிஜிட்டல் குளோன்களை உருவாக்கும் நிறுவனம்
அடுத்த செய்தி
எம்எஸ்எம்இக்கள் பயன்பெற ஆற்றல் திறன் மேம்பாட்டு மையங்கள்

தொடர்புடைய செய்திகள்