Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அன்பில் மகேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி

அன்பில் மகேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி

நீதிபதி, ஜாமீன் கோரிய அன்பில் மகேஷின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில், அரசின் அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடி அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டதாக தனியார் பள்ளிகள் சங்கம் புகார் அளித்தது.


 இந்த புகாரை விசாரித்த சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர், பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது.


இந்த வழக்கில் அக்டோபர் 26ஆம் தேதி அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு, நவ்மபர் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மகேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பாக நவம்பர் 5ஆம் தேதி இரு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், ஜாமீன் மனு மீதான உத்தரவை நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.


இந்த மனு மீது இன்று உத்தரவிட்ட நீதிபதி, ஜாமீன் கோரிய அன்பில் மகேஷின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

முந்தைய செய்தி
நிஃப்டி 50 பங்குகளில் முதலீடு - 21 ஆண்டுகளில் இல்லாத சரிவு
அடுத்த செய்தி
விஜய் வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன்

தொடர்புடைய செய்திகள்