Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விஜய் வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன்

விஜய் வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன்

சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பகிரவும் WhatsApp Facebook

முதல்வர் ச.ஜோசப் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எதிராக அவதூறு வீடியோ வெளியிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செயலாளர் சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


சாட்டை துரைமுருகன் செப்.30ம் தேதியன்று தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில், முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், கருத்துகள் தெரிவித்திருந்ததாகக் கூறி, தவெக நிர்வாகி ஒருவர் சென்னை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருந்தார்.

 
இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சாட்டை துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வீடியோவில் யாருக்கும் எதிராக எந்த அவதூறும் ஏற்படுத்தவில்லை என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக இந்த வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ரமேஷ், நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

முந்தைய செய்தி
அன்பில் மகேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி
அடுத்த செய்தி
DGTR probes aluminium dumping from China, Malaysia, Vietnam

தொடர்புடைய செய்திகள்