Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மனிதனின் டிஜிட்டல் குளோன்களை உருவாக்கும் நிறுவனம்

மனிதனின் டிஜிட்டல் குளோன்களை உருவாக்கும் நிறுவனம்

இதற்கு `ஒயிட் லைப்’ (WYTLIFE), அதாவது `வாழ்க்கை தொடர்ச்சி தளம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தனி மனிதனின் வாழ்க்கை அனுபவம், தொழில்சார்ந்த அறிவுத் திறனை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகமாகிறது.


மனிதன் தனது குழந்தை பருவம் முதல் முதுமை வரை தனிப்பட்ட வாழ்வு, தொழில்முறை அறிவு, தனித் திறமைகள் மூலம் அறிவாற்றலை பெறுகிறான். ஆனால், அவனது வாழ்க்கைக்குப் பிறகு, பல்லாண்டு கால அனுபவமும், அறிவும் உடலுடன் மண்ணில் கலந்துவிடுகிறது. இதனால் அவனது சந்ததியினர், குறிப்பாக தொழில் துறையை சார்ந்து நிற்போர் உரிய வழிகாட்டுதல் கிடைக்காமல் திண்டாட நேரிடுகிறது. இதற்கு, தீர்வுகாணும் வகையில் ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) மூலம் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் அங்கமான `டிஜிட்ஆல்’ பிரிவு தலைவர் ஜே.கே.முத்து கூறியதாவது:
ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை முறை, கடந்த கால அனுபவ அறிவு உள்ளிட்ட அவன் சார்ந்த அனைத்து தகவல்களையும் சேகரித்து ஏஐ மூலம் டிஜிட்டல் `குளோன்’ (Soul Engine Digital Clone) உருவாக்கும் முயற்சியில் கடந்த 2 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தோம். இதற்கான ஆராய்ச்சியில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, இறுதி வடிவம் கிடைத்துள்ளது. இதற்கு `ஒயிட் லைப்’ (WYTLIFE), அதாவது `வாழ்க்கை தொடர்ச்சி தளம்’ என பெயரிடப்பட்டுள்ளது. வெப்-ஆப் மற்றும் மொபைல்-ஆப் வடிவில் தயாராகி வருகிறது.

இதில், ஒரு தனி மனிதனின் அனைத்து அன்றாட நடவடிக்கைகள், அணுகுமுறை, பிடித்த, பிடிக்காத விஷயங்கள், தொழில் அல்லது வேலை ரீதியிலான செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும். தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியிலானவை என்ற அடிப்படையில் இரு பிரிவுகளாக, உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் தகவல்கள் சேகரிக்கப்பட்டு குளோன் செய்யப்படும். அந்த நபரின் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் இதில் இணைக்கப்பட்டு அவர் சார்ந்த கூடுதல் தகவல்களும் சேகரிக்கப்படும்.

இவ்வாறு பெறப்படும் தகவல்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தனி நபரின் பரிசீலனைக்கு முன்வைக்கப்படும். அவர் ஒரு குறிப்பிட்ட தகவல் இடம்பெற விரும்பவில்லை எனில் அத்தகவல் இடம்பெறாது. இவ்வாறு தகவல்கள் படிப்படியாக சேகரிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் அவதார் (குளோன்) வடிவிலான நிலையை எட்டும். ஒரு தனிப்பட்ட மனிதனின் முக அமைப்பு, குரல் பதிவு, பாவனை, உடல்மொழி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டதாக குளோன் உருப்பெறும்.


 அப்போது அதனுடன் சாட் செய்ய முடியும். வீடியோ வடிவிலும் உரையாட முடியும். நூற்றாண்டுகள் கடந்து அடுத்தடுத்து வரும் சந்ததியினரும் உரையாடி தேவையான அறிவுரை, தகவல்களை பெற முடியும். இதன்மூலம் அந்த நபர் உடலால் மறைந்தாலும் உலகின் சாகா மனிதனாக வாழ முடியும்.

ஒரு பெரிய தொழில் நிறுவனத்தின் தலைவர் திடீரென மறைந்துவிட்டால் அந்த நிறுவனம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும். இந்த தொழில்நுட்பத்தால் வாரிசுகள் அல்லது தொழிலாளர்கள் தேவையான தகவல்களை கேட்டுப்பெற்று நிறுவனத்தை தடையின்றி செயல்படுத்த முடியும். 

மொபைல் ஆப் வடிவில் மட்டுமின்றி டிவைஸ் வடிவிலும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதனை 2027ம் ஆண்டு வெளியிட முடிவு செய்துள்ளோம். தற்போது விவேகானந்தர், காந்தி அடிகள், அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களின் டிஜிட்டல் குளோன்களையும் உருவாக்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


முந்தைய செய்தி
சென்னையில் பெருகும் தனியார் ஸ்டடி ஹால்கள் - லாபம் ஈட்டுவதில் சிக்கல்
அடுத்த செய்தி
ரூ.300 கோடிக்கு ஜவுளி விற்பனை - கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் குறைவு

தொடர்புடைய செய்திகள்