Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

எம்எஸ்எம்இக்கள் பயன்பெற ஆற்றல் திறன் மேம்பாட்டு மையங்கள்

எம்எஸ்எம்இக்கள் பயன்பெற ஆற்றல் திறன் மேம்பாட்டு மையங்கள்

5 இடங்களில் ஆற்றல் திறன் மேம்பாட்டு உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSME) மின்சாரச் செலவைக் குறைத்து, உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் திருச்சி உள்பட 5 மண்டலங்களில் ஆற்றல் திறன் மேம்பாட்டு உதவி மையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக அரசின் தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் FaMeTN அமைப்பின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, சென்னை, மதுரை, கோவை, கடலூர், திருச்சி ஆகிய 5 இடங்களில் ஆற்றல் திறன் மேம்பாட்டு உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 


இவற்றின் மூலம் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும். தொழிற்சாலைகளில் மின்சாரப் பயன்பாட்டை ஆய்வு செய்து, அதிக மின்சாரம் பயன்படுத்தும் இயந்திரங்களைக் கண்டறிந்து, மின்சார விரயத்தைக் குறைப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை இம்மையங்கள் வழங்கும். பழைய இயந்திரங்களுக்குப் பதிலாக மின்சிக்கனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், சூரிய மின்சக்தி பயன்பாட்டை அதிகரித்தல் உள்ளிட்ட வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்.


இதற்கிடையே, இம்மையங்களில் பணியாற்றுவதற்கான ஆலோசகர்களைத் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. கல்வித் தகுதி, வயது வரம்பு, பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் FaMeTN இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


தகுதியுள்ளவர்கள் https://www.fametn.com/careers என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். முதற்கட்டத் தேர்வுக்குப் பிறகு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என FaMeTN பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
ரூ.300 கோடிக்கு ஜவுளி விற்பனை - கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் குறைவு
அடுத்த செய்தி
Nvidia CEO controversy unlikely to derail AI demand, say Taiwan sources

தொடர்புடைய செய்திகள்