Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் HDFC வங்கி

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் HDFC வங்கி

ஆப்பிள், வால்நட், குங்குமப்பூ உள்ளிட்ட பொருள்களைப் பதப்படுத்தும் மையங்களுக்கும் உதவி வழங்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

காஷ்மீரில் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், ஹெச்டிஎஃப்சி வங்கி தனது ‘பரிவர்த்தன்’ சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தின் ஆதரவுடன் செயல்படும் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள் (எஃப்பிஓ) ஒட்டுமொத்தமாக ரூ.5.2 கோடி வரை வருவாய் ஈட்டுகின்றன. இதில் ஒரு அமைப்பு மட்டும் ரூ.1.4 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மேலும், பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருள்களை விற்பனை செய்ய ‘சமர்காஷ்’ என்ற பிராண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு சூரியசக்தி நீர்ப்பம்புகள், சொட்டுநீர்ப் பாசனம், பாலிஹவுஸ் சாகுபடி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆப்பிள், வால்நட், குங்குமப்பூ உள்ளிட்ட பொருள்களைப் பதப்படுத்தும் மையங்களுக்கும் உதவி வழங்கப்பட்டுள்ளது.

இதனால், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைத் தரம் பிரித்து, பேக்கிங் செய்து நேரடியாக விற்பனை செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். குறிப்பாக, வால்நட் விலை கிலோ ரூ.400–500-லிருந்து ரூ.800–1,000 ஆக உயர்ந்துள்ளதாக பயனாளி தெரிவித்துள்ளார். இதனிடையே, ஸ்ரீநகரில் உள்ள ஜேஎல்என்எம் மருத்துவமனைக்கு ரூ.2.25 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களையும் வங்கி வழங்கியுள்ளது.

முந்தைய செய்தி
Brazil shares ethanol expertise to boost India's biofuel push
அடுத்த செய்தி
TRAI launches Anubhav platform to map telecom network quality

தொடர்புடைய செய்திகள்