Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விமான நிலைய கட்டணங்களை குறைக்க இண்டிகோ கோரிக்கை

விமான நிலைய கட்டணங்களை குறைக்க இண்டிகோ கோரிக்கை

இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கு அதிகமான வரிகளும் விமான நிலையக் கட்டணங்களும் தடையாக இருக்கிறது.

பகிரவும் WhatsApp Facebook

விமான நிலையக் கட்டணங்களையும் வரிகளையும் குறைக்க வேண்டும் என்று இண்டிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வில்லி வால்ஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஏவியேஷன் மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கு அதிகமான வரிகளும் விமான நிலையக் கட்டணங்களும் தடையாக இருக்கிறது. விமான நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்க, விமான நிலையங்கள் தங்களது கட்டணங்களை மேலும் போட்டித்தன்மையுடன் நிர்ணயிக்க வேண்டும். 

விமான நிறுவனங்களின் முக்கியச் செலவுகளில் விமான எரிபொருளுக்கு அடுத்தபடியாக விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கான கட்டணம், விமானங்களை நிறுத்துவதற்கான கட்டணம், பயணிகள் சேவை மேம்பாட்டுக் கட்டணம் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

இவை அனைத்தும் விமான நிறுவனங்களின் மொத்த இயக்கச் செலவையும், அதன் தொடர்ச்சியாகப் பயணச்சீட்டுக் கட்டணத்தையும் பாதிக்கின்றன. இண்டிகோ நிறுவனத்தின் முதலீட்டாளர் விளக்க அறிக்கையின்படி, 2026-27 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் விமான நிலையங்களுக்குச் செலுத்திய கட்டணங்கள் ரூ.1,660 கோடியாக உயர்ந்துள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 10 சதவீத அதிகரிப்பாகும். முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதனிடையே, விமான எரிபொருள் விலை உயர்வால் விமான நிறுவனங்களின் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழல் குறுகிய காலத்தில் மாறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
Bank deposit growth may hit 16% in FY27 on forex inflows
அடுத்த செய்தி
US midterms unlikely to disrupt AI investment boom

தொடர்புடைய செய்திகள்