Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வங்கி கடன் வளர்ச்சி 15 சதவீத அளவில் நீடிக்கலாம்

வங்கி கடன் வளர்ச்சி 15 சதவீத அளவில் நீடிக்கலாம்

பாரத ஸ்டேட் வங்கியின் உள்நாட்டு நிகர வட்டி வரம்பு 3.11 சதவீதமாக உயர்ந்தது.

பகிரவும் WhatsApp Facebook

இந்திய வங்கிகளின் லாபம் 2026-27-ம் நிதியாண்டின் எஞ்சிய காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஸ்டேமேட்டிக்ஸ் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


கடன் வழங்கல் வளர்ச்சி, வட்டி வருவாய் விகிதத்தில் (NIM) ஏற்படும் முன்னேற்றம், வாராக்கடன் தொடர்பான செலவுகள் குறைவது ஆகியவை வங்கிகளின் லாபத்தை உயர்த்தும் என கணிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டில் பெரிய தனியார் வங்கிகளின் நிகர வட்டி வரம்பு சராசரியாக 0.15 சதவீதம் குறைந்தது. 


கோடக் மஹிந்திரா, ஐசிஐசிஐ, ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி ஆகிய வங்கிகளில் இந்தச் சரிவு காணப்பட்டது. அதேநேரத்தில், பொதுத் துறை வங்கிகள் சராசரியாக 0.03 சதவீதம் உயர்வைப் பதிவு செய்தன. பாரத ஸ்டேட் வங்கியின் உள்நாட்டு நிகர வட்டி வரம்பு 3.11 சதவீதமாக உயர்ந்தது.

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியிருப்பது வங்கிகளுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வைப்புத் தொகைகளுக்கான வட்டி உயர்வதற்கு முன்பாக கடன்களுக்கான வட்டி வருவாய் அதிகரித்து, வங்கிகளின் லாப வரம்பு மேம்பட வாய்ப்புள்ளது. 

கடன் வளர்ச்சியில் மகாராஷ்டிரா வங்கி 30.2 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 30 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன. இனிவரும் காலங்களில் கடன் வளர்ச்சி 15 சதவீத அளவில் நீடிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும், சர்வதேச பதற்றங்கள், விநியோகச் சங்கிலி பாதிப்புகள், எல் நினோ தாக்கம் ஆகியவை கடன் தரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

முந்தைய செய்தி
வங்கிகள் கடன் வழங்கும் வளர்ச்சி 21 சதவீதமாக உயர்வு
அடுத்த செய்தி
பண்டிகைக் காலத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை உயர்வு

தொடர்புடைய செய்திகள்