Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வங்கிகள் கடன் வழங்கும் வளர்ச்சி 21 சதவீதமாக உயர்வு

வங்கிகள் கடன் வழங்கும் வளர்ச்சி 21 சதவீதமாக உயர்வு

வங்கிகளின் டெபாசிட் வளர்ச்சியும் 17 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு இந்த வளர்ச்சி 12 முதல் 13 சதவீதமாக இருந்தது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் கடன் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 21 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டுக்கான வங்கிகளின் கடன் வளர்ச்சி கணிப்பை 14 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக எச்எஸ்பிசி உயர்த்தியுள்ளது.


எச்எஸ்பிசி வெளியிட்டுள்ள ஆசிய பங்குச் சந்தை உத்தி அறிக்கை:

பெருநிறுவனங்களுக்கான கடன் வழங்கல் 24 சதவீதமும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (எம்எஸ்எம்இ) கடன் வழங்கல் 25 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இதேபோல், வங்கிகளின் டெபாசிட் வளர்ச்சியும் 17 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு இந்த வளர்ச்சி 12 முதல் 13 சதவீதமாக இருந்தது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் எஃப்சிஎன்ஆர் (பி) டெபாசிட்கள் மூலம் நிதி திரட்டப்பட்டது வங்கிகளின் பணப்புழக்கத்துக்கு ஆதரவாக இருந்தது. நாணய மதிப்பு சரிவு காரணமாக நிறுவனங்களின் நடைமுறை மூலதனத் தேவை அதிகரித்ததும், கடன் பத்திரச் சந்தைக்குப் பதிலாக வங்கிகளில் கடன் பெறுவது அதிகரித்ததும் கடன் வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.

மத்திய அரசின் மூலதனச் செலவினங்களும் உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குள், நடப்பு நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு ஆண்டு மூலதனச் செலவின ஒதுக்கீட்டில் 42 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 38 சதவீதமாக இருந்தது.

அண்மையில் கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்றுமதிக்கு ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, சேவைத் துறை ஏற்றுமதியைவிட பொருள்கள் ஏற்றுமதி வேகமாக வளர்ந்து வருகிறது. இருப்பினும், பணவீக்கம் அதிகரிப்பதும், கிராமப்புறங்களில் தேவை குறைவது குறித்த கவலையும் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என எச்எஸ்பிசி எச்சரித்துள்ளது.
முந்தைய செய்தி
பட்டாசு வெடித்ததில் 1,464 பேர் கண் பாதிப்பு - மருத்துவமனை வெளியிட்ட தகவல்
அடுத்த செய்தி
வங்கி கடன் வளர்ச்சி 15 சதவீத அளவில் நீடிக்கலாம்

தொடர்புடைய செய்திகள்