Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆவினில் ரூ.334 கோடியில் புதிய திட்டங்கள்

ஆவினில் ரூ.334 கோடியில் புதிய திட்டங்கள்

2027ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆலை செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பால் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய ஆலைகளும், நவீன இயந்திரங்களும் அமைக்கப்பட்டு வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.53.45 கோடி மதிப்பில் தானியங்கி பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நிறைவடைந்து, 2027ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆலை செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது.

இதேபோல், பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் ரூ.150 கோடி மதிப்பில் பால் பவுடர் தயாரிப்பு ஆலை அமைக்கப்படுகிறது. இந்த ஆலை வரும் ஜனவரி மாதத்தில் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சேலத்தில் ரூ.58.35 கோடி மதிப்பிலான பால் பண்ணைத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் சுமார் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அச்சரப்பாக்கத்தில் ரூ.46 கோடி மதிப்பில் அமைக்கப்படும் புதிய திட்டம், வரும் ஜனவரி மாதத்தில் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும், பால் பாக்கெட்டுகளை நிரப்பி அடைக்கும் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், பல்வேறு பால் பண்ணைகளில் தானியங்கி பேக்கிங் இயந்திரங்கள் நிறுவப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூரில் ரூ.5.10 கோடி, மதுரையில் ரூ.3.20 கோடி, கோவை மற்றும் சேலத்தில் தலா ரூ.3.15 கோடி, திருச்சியில் ரூ.3.30 கோடி, மாதவரத்தில் ரூ.6.02 கோடி மதிப்பில் இந்த இயந்திரங்கள் அமைக்கப்படுகின்றன.

இதுதவிர, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.2 கோடி மதிப்பில் சாக்லேட் தயாரிப்பு ஆலை தொடர்பான பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தத் திட்டங்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, பால் பதப்படுத்துதல், பால் பவுடர் தயாரித்தல் மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்தல் உள்ளிட்ட பணிகளின் திறன் மேம்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



தானியங்கி பேக்கிங் இயந்திரங்கள்

இடம்                                                         திட்ட மதிப்பு

சோழிங்கநல்லூர்                                 ரூ.5.10 கோடி

மதுரை                                                    ரூ.3.20 கோடி

கோவை                                                  ரூ.3.15 கோடி

சேலம்                                                     ரூ.3.15 கோடி

திருச்சி                                                   ரூ.3.30 கோடி

மாதவரம்                                               ரூ.6.02 கோடி


இதர திட்டம்

ஊட்டி: ரூ.2 கோடியில் சாக்லேட் தயாரிப்பு ஆலை
முந்தைய செய்தி
சர்ஃப் எக்ஸெல், ரின், வீல் விலை உயர்வு - எவ்வளவு தெரியுமா?
அடுத்த செய்தி
டெலிகிராமுக்கு ரஷ்யாவில் அபராதம்: எவ்வளவு? ஏன் தெரியுமா?

தொடர்புடைய செய்திகள்