Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தங்கம் விற்பனையில் 15 சதவீதம் சரிவு - விலை உயரும்

தங்கம் விற்பனையில் 15 சதவீதம் சரிவு - விலை உயரும்

தங்கம் வாங்கும் தினங்களில் 'அக்‌ஷய திருதியை' முதலிடத்தையும், தீபாவளி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

வழக்கமாக தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசுகளுக்கு அடுத்தபடியாக தங்கம் விற்பனை களைகட்டும். ஆனால், இந்த ஆண்டு சென்னையில் தீபாவளிக்குத் தங்கம் விற்பனை மந்தமாகவே காணப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது தங்கம் விற்பனை 10 முதல் 15 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளது.


இதுகுறித்து சென்னை தங்க நகை வியாபாரி சங்க நிர்வாகி சாந்த குமார் கூறியதாவது:
முன்பெல்லாம் தங்கம் வாங்குவதற்கு மக்களின் முதல் தேர்வாகத் தீபாவளிப் பண்டிகையே இருந்தது. மற்ற விசேஷ நாட்கள் அடுத்தடுத்த இடங்களிலேயே இருந்தன. ஆனால், தற்போது அந்த நிலை மாறியுள்ளது. தங்கம் வாங்கும் தினங்களில் 'அக்‌ஷய திருதியை' முதலிடத்தையும், தீபாவளி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. 


தீபாவளிக்கு நகை வாங்குவது என்பது மக்களிடையே தற்போது இரண்டாம் பட்சமாக மாறிவிட்டது. இந்த விற்பனைச் சரிவுக்கு முக்கியக் காரணம், தங்கத்தின் விலையில் காணப்பட்ட நிலையற்ற தன்மையே ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இடையில் தங்கம் விலை 35% வரை கிடுகிடுவென உயர்ந்து, பின்னர் 30% வரை சரிந்தது. இதுபோன்ற விலை ஏற்ற, இறக்கங்களால் மக்கள் சற்று தயக்கம் காட்டினர். மேலும், தற்போதைய வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்குவதில் மிகவும் தெளிவாகவும், விழிப்புணர்வுடனும் உள்ளனர்.

அன்றாட சந்தை நிலவரங்களை அவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். இதனால், பண்டிகை அல்லது விசேஷ நாட்களுக்காகக் காத்திருக்காமல், கையில் பணம் இருக்கும்போதோ அல்லது தங்கம் விலை கணிசமாகக் குறையும்போதோ தங்கம் வாங்கும் நவீன மனநிலைக்கு மக்கள் மாறிவிட்டனர். இனி வரும் காலங்களில் தங்கத்திற்கான தேவை சந்தையில் பெருமளவு அதிகரிக்கும்.

 ஈரான் போர் போன்ற சர்வதேச புவிசார் அரசியல் பதற்றங்கள் குறையும்போது, தங்கத்தின் விலை ஓரளவுக்கு நிலையான தன்மைக்கு வர வாய்ப்புள்ளது. இருப்பினும், தற்போதைய விலையிலிருந்து தங்கம் விலை குறைய வாய்ப்பே இல்லை. மாறாக, இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே தங்கம் விலை மேலும் 20 முதல் 25 சதவீதம் வரை அதிரடியாக உயரவே அதிக வாய்ப்புகள் உள்ளன எனத் தெரிவித்தார்.

விவரம்

1.இந்த ஆண்டு தீபாவளி விற்பனை சரிவு 10% முதல் 15% வரை
2.கடந்த ஓராண்டில் காணப்பட்ட விலை
ஏற்றம் 35% வரை உயர்வு
3.விலை உச்சத்திற்குப் பின் ஏற்பட்ட சரிவு 30% வரை இறக்கம்
4.இந்த ஆண்டு இறுதிக்குள் எதிர்பார்க்கப்படும்
விலை ஏற்றம் 20% முதல் 25% வரை

முந்தைய செய்தி
மல்லிகை விலை சரிவு - ஒரு கிலோ இவ்வளவுதானா.?
அடுத்த செய்தி
பெருநிறுவனப் பங்குப் பிரிவு - ஜியோ, என்எஸ்இ இடம்பெற வாய்ப்பு

தொடர்புடைய செய்திகள்