Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பெருநிறுவனப் பங்குப் பிரிவு - ஜியோ, என்எஸ்இ இடம்பெற வாய்ப்பு

பெருநிறுவனப் பங்குப் பிரிவு - ஜியோ, என்எஸ்இ இடம்பெற வாய்ப்பு

லென்ஸ்கார்ட் சொல்யூஷன்ஸ், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா ஆகிய ஐந்து பங்குகள் பெருநிறுவனப் பிரிவுக்கு உயர வாய்ப்புள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பரஸ்பர நிதி நிறுவனங்கள் சங்கத்தின் (ஆம்ஃபி) 2027 முதல் அரையாண்டுக்கான பங்கு வகைப்பாட்டில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) ஆகியவை பெருநிறுவனப் பங்குப் பிரிவில் இடம்பெறலாம். வேதாந்தா நடுத்தர நிறுவனப் பங்குப் பிரிவுக்கு மாறலாம் என நுவாமா இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் கணித்துள்ளது.

அரையாண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் இந்த வகைப்பாட்டில், தற்போது நடுத்தரப் பிரிவில் உள்ள போஷ், ஜைடஸ் லைஃப்சயின்சஸ், லோதா டெவலப்பர்ஸ், லென்ஸ்கார்ட் சொல்யூஷன்ஸ், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா ஆகிய ஐந்து பங்குகள் பெருநிறுவனப் பிரிவுக்கு உயர வாய்ப்புள்ளது.


மறுபுறம், வேதாந்தா, கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், அம்புஜா சிமென்ட்ஸ், இண்டஸ் டவர்ஸ், டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், இந்திய ரயில்வே நிதிக் கழகம், எச்டிஎஃப்சி ஏஎம்சி ஆகிய ஏழு பங்குகள் பெருநிறுவனப் பிரிவிலிருந்து நடுத்தரப் பிரிவுக்கு மாறக்கூடும்.


சிறு நிறுவனப் பிரிவிலிருந்து ஏத்தர் எனர்ஜி, ஆர்பிஎல் வங்கி, வெல்ஸ்பன் கார்ப்பரேஷன், கிளாண்ட் பார்மா, கே.பி.ஆர். மில், பிசிக்ஸ்வாலா உள்ளிட்ட 13 பங்குகள் நடுத்தரப் பிரிவுக்கு உயரலாம். இவற்றில் எம்கியூர் பார்மசூட்டிகல்ஸ், ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ், குளோபல் ஹெல்த், ஆனந்த் ரதி வெல்த் ஆகிய நான்கு பங்குகள் வகைப்பாட்டு எல்லைக்கு அருகில் உள்ளன. எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட், மணிப்பால் ஹெல்த் எண்டர்பிரைசஸ், இந்தோ-எம்ஐஎம் ஆகியவை புதிதாக நடுத்தரப் பிரிவில் இடம்பெறலாம்.


ஐடிசி ஹோட்டல்ஸ், கன்டெய்னர் கார்ப்பரேஷன், கொச்சின் ஷிப்யார்டு உள்ளிட்ட 18 பங்குகள் நடுத்தரப் பிரிவிலிருந்து சிறு நிறுவனப் பிரிவுக்கு மாறலாம். மில்கி மிஸ்ட், லலிதா ஜுவல்லரி, ஆக்மான்ட் உள்ளிட்ட 87 பங்குகள் சிறு நிறுவனப் பிரிவில் புதிதாக இடம்பெற வாய்ப்புள்ளது.


தற்போதைய சராசரி சந்தை மதிப்புகளின்படி, பெருநிறுவனப் பிரிவுக்கான குறைந்தபட்ச சந்தை மதிப்பு, 2026 ஜூனில் இருந்த ரூ.1.06 லட்சம் கோடியிலிருந்து சுமார் ரூ.1.12 லட்சம் கோடியாக உயரக்கூடும். அதேபோல், நடுத்தரப் பிரிவுக்கான குறைந்தபட்ச சந்தை மதிப்பு ரூ.33,600 கோடியிலிருந்து சுமார் ரூ.36,700 கோடியாக அதிகரிக்கலாம்.
2026 ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலத்தின் சராசரி சந்தை மதிப்பு அடிப்படையில் வகைப்பாடு நிர்ணயிக்கப்படும். புதிய பட்டியல் 2027 பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும்.


வகைப்பாட்டு மாற்றத்தால் மட்டும் சம்பந்தப்பட்ட பங்குகளில் முதலீடு தானாக அதிகரிக்கவோ குறையவோ செய்யாது. பரஸ்பர நிதி மேலாளர்கள் தங்கள் திட்டங்களுக்காகப் புதிதாகப் பங்குகளை வாங்கும்போதும், ஏற்கெனவே வைத்துள்ள பங்குகளின் அளவை மாற்றும்போதும் இந்தப் பட்டியலைக் கருத்தில் கொள்வார்கள் என நுவாமா தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
தங்கம் விற்பனையில் 15 சதவீதம் சரிவு - விலை உயரும்
அடுத்த செய்தி
MRF நிறுவனத்தின் Q2 லாபம் 28% சரிவு

தொடர்புடைய செய்திகள்