Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

MRF நிறுவனத்தின் Q2 லாபம் 28% சரிவு

MRF நிறுவனத்தின் Q2 லாபம் 28% சரிவு

நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 17.6 சதவீதம் அதிகரித்து ரூ.8,524 கோடியாக உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

டயர் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால், எம்.ஆர்.எஃப்-ன் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 28 சதவீதம் சரிவடைந்துள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்ட எம்.ஆர்.எஃப் டயர் உற்பத்தி நிறுவனம் நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 


அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 27.8 சதவீதம் குறைந்து ரூ.369.15 கோடியாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ.511.59 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


சர்வதேச சந்தையில் இயற்கை ரப்பர் உள்ளிட்ட அத்தியாவசிய மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததே இந்த லாபச் சரிவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சந்தையில் வாகன டயர்களுக்கான தேவை சீராக இருந்ததால் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 17.6 சதவீதம் அதிகரித்து ரூ.8,524 கோடியாக உயர்ந்துள்ளது. 

மேலும், பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.3 இடைக்கால ஈவுத்தொகை (டிவிடெண்ட்) வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

முந்தைய செய்தி
பெருநிறுவனப் பங்குப் பிரிவு - ஜியோ, என்எஸ்இ இடம்பெற வாய்ப்பு
அடுத்த செய்தி
Global credit conditions to weaken in 2027: Moody's

தொடர்புடைய செய்திகள்