Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஐ.டி. நிறுவனங்களுக்கு கைகொடுக்கும் சிறிய ஒப்பந்தங்கள்

ஐ.டி. நிறுவனங்களுக்கு கைகொடுக்கும் சிறிய ஒப்பந்தங்கள்

வருவாய் ஈட்டித் தரக்கூடிய சிறு மற்றும் நடுத்தர திட்டங்களைக் கைப்பற்றுவதில் முழு கவனம் செலுத்தி வருகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு (ஐ.டி.) பல நூறு மில்லியன் டாலர் மதிப்பிலான மெகா ஒப்பந்தங்களை விட 1 முதல் 10 மில்லியன் டாலர் வரையிலான சிறிய ஒப்பந்தங்களே தற்போதைய முதன்மை வருவாய் ஆதாரமாக மாறியுள்ளன.


அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக, பன்னாட்டு வாடிக்கையாளர்கள் பல ஆண்டுகள் நீடிக்கும் மெகா ஒப்பந்தங்களில் உடனடியாகக் கையெழுத்திடுவதைத் தவிர்த்து வருகின்றனர்.


 இதன் காரணமாக டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் ஹெச்சிஎல் உள்ளிட்ட முன்னணி இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது வர்த்தக வியூகத்தை மாற்றி அமைத்து, உடனடியாக வருவாய் ஈட்டித் தரக்கூடிய சிறு மற்றும் நடுத்தர திட்டங்களைக் கைப்பற்றுவதில் முழு கவனம் செலுத்தி வருகின்றன.

பல மாதங்கள் வரை நீளும் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே இறுதியாகும் பெருந்திட்டங்களை விட, 1 மில்லியன் முதல் 10 மில்லியன் டாலர் மதிப்பிலான கிளவுட் கட்டமைப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற குறுகிய காலத் திட்டங்கள் விரைவாக முடிவடைவதுடன் நிறுவனங்களுக்குத் தடையற்ற பணப்புழக்கத்தையும் உறுதி செய்கின்றன. குறிப்பாக, நிறுவனங்கள் தங்களது தினசரி உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைச் சிறிய அளவில் பரிசோதித்துப் பார்க்க விரும்புகின்றன. எனவே, இத்தகைய குறுகிய கால ஒப்பந்தங்களின் எண்ணிக்கை சந்தையில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

தற்போதைய சந்தை சூழலில் பெரிய அளவிலான ஒப்பந்தங்களின் வரத்து மந்தமாக உள்ள போதிலும், இந்தச் சிறிய ஒப்பந்தங்களின் மூலமாகவே நிறுவனங்களின் காலாண்டு வருவாய் வளர்ச்சி வீழ்ச்சியடையாமல் சீராகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

சர்வதேச நிறுவனங்களின் தொழில்நுட்பச் செலவினங்கள் முழுமையாக மீட்சியடையும் வரை, இத்தகைய சிறு மற்றும் நடுத்தர தொழில்நுட்ப ஒப்பந்தங்களே இந்திய ஐ.டி. சேவைத் துறையின் லாப வரம்பைத் தாங்கிப் பிடிக்கும் உந்துசக்தியாகத் தொடரும் என்று தொழில் துறை சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



முந்தைய செய்தி
Global credit conditions to weaken in 2027: Moody's
அடுத்த செய்தி
சர்ஃப் எக்ஸெல், ரின், வீல் விலை உயர்வு - எவ்வளவு தெரியுமா?

தொடர்புடைய செய்திகள்