Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சர்ஃப் எக்ஸெல், ரின், வீல் விலை உயர்வு - எவ்வளவு தெரியுமா?

சர்ஃப் எக்ஸெல், ரின், வீல் விலை உயர்வு - எவ்வளவு தெரியுமா?

நான்கு சோப்புகள் கொண்ட தொகுப்பின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.155 ஆனது.

பகிரவும் WhatsApp Facebook

மூலப்பொருள் செலவு அதிகரித்துள்ளதால், சர்ஃப் எக்ஸெல், ரின், வீல் உள்ளிட்ட வீட்டு பராமரிப்புப் பொருட்களின் அதிகபட்ச சில்லரை விலையை ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் 11 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.


பாக்கெட் அளவைப் பொறுத்து விலை ரூ.1 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. சர்ஃப் எக்ஸெல் குயிக் வாஷ் ஒரு கிலோ பாக்கெட் ரூ.235-லிருந்து ரூ.245 ஆகவும், 500 கிராம் பாக்கெட் ரூ.123-லிருந்து ரூ.128 ஆகவும் உயர்ந்துள்ளது. சர்ஃப் எக்ஸெல் ஈஸி வாஷ் ஒரு கிலோ பாக்கெட் ரூ.167-லிருந்து ரூ.172 ஆகவும், 500 கிராம் பாக்கெட் ரூ.85-லிருந்து ரூ.87 ஆகவும் உயர்ந்துள்ளது. சர்ஃப் எக்ஸெல் 250 கிராம் சலவை சோப்பின் விலை ரூ.3 உயர்ந்து ரூ.45 ஆனது. தலா 200 கிராம் எடையுள்ள நான்கு சோப்புகள் கொண்ட தொகுப்பின் விலை ரூ.10 உயர்ந்து ரூ.155 ஆனது.


ரின் ஆலா 500 மி.லி. விலை ரூ.5 உயர்ந்து ரூ.95 ஆனது. ரின் சலவைத் தூள் ஒரு கிலோ பாக்கெட் ரூ.3 உயர்ந்து ரூ.123 ஆகவும், 500 கிராம் பாக்கெட் ரூ.2 உயர்ந்து ரூ.63 ஆகவும் விற்கப்படுகிறது.

வீல் சலவைத் தூள் ஒரு கிலோ பாக்கெட் ரூ.3 உயர்ந்து ரூ.93 ஆனது. அதன் 500 கிராம் பாக்கெட் ரூ.46-லிருந்து ரூ.47 ஆக உயர்ந்தது. மோதி குலாப் 150 கிராம் குளியல் சோப்பின் விலை ரூ.74-லிருந்து ரூ.82 ஆக உயர்ந்துள்ளது. 

மூலப்பொருள் செலவின் போக்கைப் பொறுத்து விலை படிப்படியாக உயர்த்தப்படும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பிரியா நாயர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

முந்தைய செய்தி
ஐ.டி. நிறுவனங்களுக்கு கைகொடுக்கும் சிறிய ஒப்பந்தங்கள்
அடுத்த செய்தி
ஆவினில் ரூ.334 கோடியில் புதிய திட்டங்கள்

தொடர்புடைய செய்திகள்