Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பட்டாசு வெடித்ததில் 1,464 பேர் கண் பாதிப்பு - மருத்துவமனை வெளியிட்ட தகவல்

பட்டாசு வெடித்ததில் 1,464 பேர் கண் பாதிப்பு - மருத்துவமனை வெளியிட்ட தகவல்

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை வெளியிட்ட தகவலின்படி, நவம்பர் 4 முதல் 9 வரை அதன் பல்வேறு மருத்துவமனைகளில் பட்டாசுகளால் கண் பாதிப்புக்குள்ளான 1,464 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடித்ததில் கண்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உட்பட 1,464 பேருக்கு அரவிந்த் கண் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் ஆர்.உஷா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடி விபத்தால் ஏற்படும் கண் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. இந்த ஆண்டு மதுரை உள்ளிட்ட அனைத்து அரவிந்த் கண் மருத்துவமனைகளிலும் பட்டாசு வெடி விபத்தில் கண்கள் பாதிக்கப்பட்டு கடந்த 6 நாட்களில் இதுவரை 1,464 பேர் சிகிச்சைக்கு வந்துள்ளனர். இவர்களில் 54 சதவீதம் பேர் குழந்தைகள் என்பது வருத்தம் அளிக்கிறது. 


மதுரையில் மட்டும் 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 8 பேருக்கு கண்கள் அகற்றப்பட்டுள்ளன. எனவே, குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் கண் பார்வையை பாதுகாக்க பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
டெலிகிராமுக்கு ரஷ்யாவில் அபராதம்: எவ்வளவு? ஏன் தெரியுமா?
அடுத்த செய்தி
வங்கிகள் கடன் வழங்கும் வளர்ச்சி 21 சதவீதமாக உயர்வு

தொடர்புடைய செய்திகள்