Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டெலிகிராமுக்கு ரஷ்யாவில் அபராதம்: எவ்வளவு? ஏன் தெரியுமா?

டெலிகிராமுக்கு ரஷ்யாவில் அபராதம்: எவ்வளவு? ஏன் தெரியுமா?

நவம்பர் 3-ஆம் தேதி, ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்காத மூன்று விதிமீறல்களுக்காக டெலிகிராமுக்கு 1.46 கோடி ரூபிள் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது

பகிரவும் WhatsApp Facebook

ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட பதிவுகளை நீக்காததற்காக, டெலிகிராம் நிறுவனத்துக்கு மாஸ்கோவின் தகான்ஸ்கி மாவட்ட நீதிமன்றம் 38 லட்சம் ரூபிள் (45,921 அமெரிக்க டாலர்) அபராதம் விதித்தது.

ரஷ்ய ராணுவம் குறித்த பொய்ச் செய்திகள் மற்றும் ராணுவ வீரர்களின் தனிப்பட்ட விவரங்கள் டெலிகிராமில் வெளியிடப்பட்டது தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டது.
தடை செய்யப்பட்ட தகவல்களையோ, இணையப் பக்கங்களையோ நீக்கத் தவறும் இணையதள உரிமையாளர்களுக்குப் பொருந்தும் ரஷ்ய நிர்வாகக் குற்றச் சட்டத்தின் 13.41-வது பிரிவின் இரண்டாம் பகுதியின் கீழ் டெலிகிராம் குற்றம் புரிந்ததாக நீதிபதி அறிவித்தார்.

இதற்கிடையே, ரஷ்யாவில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட அபராதங்களை டெலிகிராம் நிறுவனம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தாததால், அதன் மொத்த நிலுவைத் தொகை 3.8 கோடி ரூபிளைத் தாண்டியுள்ளதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிலுவைத் தொகை சுமார் 4.59 லட்சம் அமெரிக்க டாலருக்குச் சமம்.

முந்தைய செய்தி
ஆவினில் ரூ.334 கோடியில் புதிய திட்டங்கள்
அடுத்த செய்தி
பட்டாசு வெடித்ததில் 1,464 பேர் கண் பாதிப்பு - மருத்துவமனை வெளியிட்ட தகவல்

தொடர்புடைய செய்திகள்