Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கலிபோர்னியாவில் செல்வ வரித் திட்டம் தோல்வி

கலிபோர்னியாவில் செல்வ வரித் திட்டம் தோல்வி

‘புரபோசிஷன் 40’ என அழைக்கப்பட்ட இத்திட்டம் நிறைவேறியிருந்தால், 10,000 கோடி டாலர் வருவாய் கிடைத்திருக்கும் என மதிப்பிடப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், 100 கோடி டாலருக்கு மேல் நிகரச் சொத்து கொண்டவர்களுக்கு ஒருமுறை 5 சதவீத வரி விதிக்கும் திட்டத்தை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்.

சுமார் 60 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திட்டத்துக்கு எதிராக 55.6 சதவீத வாக்குகளும், ஆதரவாக 44.4 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. அமெரிக்க இடைத்தேர்தலுடன் இந்த வாக்கெடுப்பும் நடைபெற்றது.


‘புரபோசிஷன் 40’ என அழைக்கப்பட்ட இத்திட்டம் நிறைவேறியிருந்தால், 10,000 கோடி டாலர் வருவாய் கிடைத்திருக்கும் என மதிப்பிடப்பட்டது. இதில் பெரும்பகுதியை சுகாதாரத் திட்டங்களுக்கு ஒதுக்கவும், எஞ்சிய தொகையைக் கல்வி மற்றும் உணவு உதவித் திட்டங்களுக்குப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.


பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைக்க இத்திட்டம் உதவும் என செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் ஆதரவு தெரிவித்தார். அதிபர் டொனால்ட் டிரம்பின் சட்டத்தால் மத்திய அரசு நிதியில் ஏற்பட்ட வெட்டுகளை ஈடுகட்ட இந்த வரி தேவை என ஜனநாயகக் கட்சியினர் வாதிட்டனர்.


ஆனால், கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் இத்திட்டத்தை எதிர்த்தார். பெரும் பணக்காரர்களும் தொழில்நுட்பத் தொழில்முனைவோரும் மாநிலத்தை விட்டு வெளியேறினால், வருமான வரி வருவாயும், வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படும் என எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர். கூகுள் இணை நிறுவனர் செர்கே பிரின் உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள், திட்டத்துக்கு எதிரான பிரசாரத்துக்கு 25 கோடி டாலருக்கும் அதிகமாகச் செலவிட்டனர்.


இதற்கிடையே, பெரும் பணக்காரர்கள் உரிய வரியைச் செலுத்துவதை உறுதிசெய்யவும், வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும் என அமெரிக்க செனட் நிதிக் குழுவின் அடுத்த தலைவர் ரான் வைடன் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
Misinformation fueling public fear, says President Murmu

தொடர்புடைய செய்திகள்