Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஆப்கானிஸ்தானில் மருந்து ஆலை விரிவாக்கம்

ஆப்கானிஸ்தானில் மருந்து ஆலை விரிவாக்கம்

கூடுதலாகப் பல வகையான மருந்துகளையும் உற்பத்தி செய்ய முடியும்

பகிரவும் WhatsApp Facebook

மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள மருந்து உற்பத்தி ஆலையை 3 கோடி அமெரிக்க டாலர் முதலீட்டில் விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ், ஆலை வளாகத்தில் தலா ஐந்து தளங்களைக் கொண்ட மூன்று புதிய கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில் சர்வதேசத் தரத்துக்கு ஏற்ப மேம்பட்ட இயந்திரங்கள் நிறுவப்படும் என்றும், நவீன உற்பத்தித் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்றும் ஹெராத் மாகாண அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்ததும், ஆலையின் மருந்து உற்பத்தித் திறன் உயரும். தற்போது தயாரிக்கப்படும் மருந்துகளுடன் கூடுதலாகப் பல வகையான மருந்துகளையும் உற்பத்தி செய்ய முடியும் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.


உள்நாட்டிலேயே அதிக அளவிலும் பல வகைகளிலும் மருந்துகளைத் தயாரிக்கும் திறனை வளர்ப்பதன் மூலம், இறக்குமதி மருந்துகளைச் சார்ந்திருக்கும் நிலையைப் படிப்படியாகக் குறைக்க இந்த விரிவாக்கம் உதவும் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
ஜெர்மனி அதிபர் பதவிக்கு இல்சே ஐக்னர் பரிந்துரை
அடுத்த செய்தி
எரிபொருள் விலை உயர்வு - ஐரோப்பாவில் விமானச் சேவைகள் குறைப்பு

தொடர்புடைய செய்திகள்