Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஜெர்மனி அதிபர் பதவிக்கு இல்சே ஐக்னர் பரிந்துரை

ஜெர்மனி அதிபர் பதவிக்கு இல்சே ஐக்னர் பரிந்துரை

சர்வதேச நெருக்கடிகளும் தீவிரவாதமும் அதிகரிக்கும் சூழலில், நாட்டை ஒன்றிணைக்கும் அதிபர் தேவை

பகிரவும் WhatsApp Facebook

ஜெர்மனி அதிபர் பதவிக்கு இல்சே ஐக்னரை அந்நாட்டுப் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் பரிந்துரைத்தார். பவேரியா மாநில நாடாளுமன்றத் தலைவரான ஐக்னர், கிறிஸ்தவ சமூக ஒன்றியத்தைச் சேர்ந்தவர். அவரது வேட்புமனுவுக்கு கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் தேசிய செயற்குழு ஆதரவு தெரிவித்துள்ளதாக மெர்ஸ் கூறினார்.

 சர்வதேச நெருக்கடிகளும் தீவிரவாதமும் அதிகரிக்கும் சூழலில், நாட்டை ஒன்றிணைக்கும் அதிபர் தேவை என்றார்.

சமூகப் பிளவுகளைக் குறைப்பதே தனது நோக்கம் என ஐக்னர் தெரிவித்தார். ஜெர்மனி அதிபரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டாட்சிப் பேரவை, 2027 ஜனவரி 30 அன்று கூடுகிறது. நாடாளுமன்றக் கீழவை உறுப்பினர்களும் மாநிலப் பிரதிநிதிகளும் இடம்பெறும்.


 இப்பேரவை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபரைத் தேர்ந்தெடுக்கிறது. பேரவையில் ஐக்னரை ஆதரிக்கும் கட்சிகளுக்குப் பெரும்பான்மை இருப்பதால், அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
6 நிறுவனங்களின் ஐபிஓவுக்கு செபி ஒப்புதல்
அடுத்த செய்தி
ஆப்கானிஸ்தானில் மருந்து ஆலை விரிவாக்கம்

தொடர்புடைய செய்திகள்