Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மலேசிய உற்பத்தித் துறை விற்பனை 10.7% உயர்வு

மலேசிய உற்பத்தித் துறை விற்பனை 10.7% உயர்வு

இதன் மதிப்பு சுமார் 13,662 கோடி அமெரிக்க டாலராகும்.

பகிரவும் WhatsApp Facebook

மலேசியாவின் உற்பத்தித் துறை விற்பனை மதிப்பு, 2026-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 10.7 சதவீதம் உயர்ந்து 55,350 கோடி ரிங்கிட்டை எட்டியது. இதன் மதிப்பு சுமார் 13,662 கோடி அமெரிக்க டாலராகும்.

இரண்டாம் காலாண்டில் 9.3 சதவீதமாக இருந்த ஆண்டு அடிப்படையிலான விற்பனை வளர்ச்சி, மூன்றாம் காலாண்டில் 1.4 சதவீதப் புள்ளிகள் அதிகரித்தது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், மூன்றாம் காலாண்டு விற்பனை மதிப்பு 5.5 சதவீதம் உயர்ந்ததாக மலேசியப் புள்ளியியல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

 
மூன்றாம் காலாண்டின் தொடக்க மாதமான ஜூலையில் விற்பனை 9.1 சதவீதம் உயர்ந்து 17,730 கோடி ரிங்கிட்டாக இருந்தது. ஆகஸ்டில் விற்பனை வளர்ச்சி 9.9 சதவீதமாக உயர்ந்தது.

  காலாண்டின் கடைசி மாதமான செப்டம்பரில், கடந்த ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில், விற்பனை மதிப்பு 12.9 சதவீதம் அதிகரித்து 19,110 கோடி ரிங்கிட்டை எட்டியது.

முந்தைய செய்தி
இந்திய பங்குகளுக்கு அந்நிய முதலீடு திரும்ப வாய்ப்பு
அடுத்த செய்தி
6 நிறுவனங்களின் ஐபிஓவுக்கு செபி ஒப்புதல்

தொடர்புடைய செய்திகள்