Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உயர் தொழில்நுட்ப ரோந்துப் பணி - காவல் துறைக்கு இ-பைக்குகள்

உயர் தொழில்நுட்ப ரோந்துப் பணி - காவல் துறைக்கு இ-பைக்குகள்

ஒருமுறை மின்னேற்றம் செய்தால் அதிகபட்சம் 150 கி.மீ. வரை பயணிக்கும்.

பகிரவும் WhatsApp Facebook

பிஹார் காவல் துறைக்கு 1,100 மின்சார பைக்குகளை வழங்குவதற்கான ஆர்டரை ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

 ரத்தன் இந்தியா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்நிறுவனம், தனது 'பிளேஸ்எக்ஸ்' மாடலை பாட்னாவில் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், நவம்பர் மாதத்திலேயே விநியோகத்தை முடிக்க முயற்சி செய்து வருகிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் தலைவர் அஞ்சலி ரத்தன் கூறுகையில், "அரசு நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் இதுபோன்ற ஆர்டர்கள், மின்சார வாகனங்களைப் பொதுப் பயன்பாட்டுக்கு விரிவுபடுத்த உதவும்" என்றார். 


இந்த பைக் ஒருமுறை மின்னேற்றம் செய்தால் அதிகபட்சம் 150 கி.மீ. வரை பயணிக்கும். கழற்றக்கூடிய பேட்டரி, சார்ஜரை வைத்துச் செல்லும் இடவசதி, ஜிபிஎஸ் வசதி ஆகியவை இதில் உள்ளன.

முந்தைய செய்தி
Ahead of Deepavali set up temporary bus terminals
அடுத்த செய்தி
OpenAI to acquire Pierre to boost Codex capabilities

தொடர்புடைய செய்திகள்