Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இனி வாட்ஸ் அப்பில் PF இருப்பு விவரம்

இனி வாட்ஸ் அப்பில் PF இருப்பு விவரம்

EPFO-வின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணான +91 87964 41800-க்கு 'Hi' என்று குறுஞ்செய்தி அனுப்பினால் போதும்.

பகிரவும் WhatsApp Facebook

தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை வருங்கால வைப்பு நிதியாக (PF) பிடித்தம் செய்யப்படுகிறது.


இந்தத் தொகை எவ்வளவு சேர்ந்துள்ளது. கடைசியாக எப்போது பணம் வரவு வைக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள இதுவரை EPFO இணையதளம் அல்லது UMANG செயலியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்நிலையில், இனி வாட்ஸ்அப் மூலமாகவே இந்த விவரங்களைப் பெறும் புதிய வசதியை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, EPFO-வின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணான +91 87964 41800-க்கு 'Hi' என்று குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். முதலில் விருப்பமான மொழியைத் தேர்வு செய்யும் வசதி வழங்கப்படும். தொடர்ந்து, பி.எப். இருப்புத் தொகையைச் சரிபார்த்தல், கடைசி ஐந்து பரிவர்த்தனைகளைக் காணுதல், பாஸ்புக் விவரங்களைப் பெறுதல் உள்ளிட்ட சேவைகளைத் தேர்வு செய்யலாம். தேவையான அடையாளச் சரிபார்ப்பை முடித்த பிறகு கணக்கு விவரங்களைப் பெற முடியும்.

இந்த வசதியை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நவம்பர் 1-ம் தேதி நடைபெற்ற EPFO-வின் 74-வது நிறுவன தின விழாவில் தொடங்கி வைத்தார். மேலும், பிரதமரின் விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டம் தொடர்பான வழிகாட்டுதல்களையும் வாட்ஸ்அப் மூலம் பெறலாம்.
இதன் மூலம், அடிக்கடி இணையதளத்தில் உள்நுழைந்து விவரங்களைத் தேட வேண்டிய சிரமம் குறைவதுடன், எளிய முறையில் பி.எப். கணக்கைக் கண்காணிக்கவும் ஊழியர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

பயனர்கள் எச்சரிக்கை:

EPFO கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, சரிபார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணை மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும். OTP, UAN கடவுச்சொல் உள்ளிட்ட ரகசிய விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது.
முந்தைய செய்தி
ரூ.3,500 கோடியில் ஆடம்பர குடியிருப்புகள் - எங்கு தெரியுமா?
அடுத்த செய்தி
ரூ.80 கோடி இனிப்புகளை விற்க இலக்கு நிர்ணயித்த ஆவின்

தொடர்புடைய செய்திகள்