Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.3,500 கோடியில் ஆடம்பர குடியிருப்புகள் - எங்கு தெரியுமா?

ரூ.3,500 கோடியில் ஆடம்பர குடியிருப்புகள் - எங்கு தெரியுமா?

7 ஏக்கர் பரப்பளவில் 'அலூரா' என்ற பெயரில் இந்த புதிய திட்டம் அமையவுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ரியல் எஸ்டேட் நிறுவனமான 'பயனியர் அர்பன் லேண்ட் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்', தனது வர்த்தக விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியின் குருகிராமில் ரூ.3,500 கோடி மதிப்பிலான அதிநவீன ஆடம்பர குடியிருப்புத் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.


குருகிராமின் செக்டார் 62, கோல்ஃப் கோர்ஸ் எக்ஸ்டென்ஷன் சாலையில் 7 ஏக்கர் பரப்பளவில் 'அலூரா' என்ற பெயரில் இந்த புதிய திட்டம் அமையவுள்ளது. இதில் சுமார் 250 அதிநவீன குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.


 34 லட்சம் சதுர அடி கட்டுமானப் பரப்பளவைக் கொண்ட இந்தத் திட்டத்தில், ஒரு வீட்டின் ஆரம்ப விலை ரூ.28 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், 2031-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வாடிக்கையாளர்களிடம் வீடுகள் ஒப்படைக்கப்படும்.

 இத்திட்டத்திற்கான ரூ.3,500 கோடி முதலீடு, நிறுவனத்தின் பங்குகள், கடன்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் பெறப்படும் முன்பணம் ஆகியவற்றின் மூலம் திரட்டப்படும் என்று நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனீஷ் பெரிவால் தெரிவித்தார்.

 இந்நிறுவனம், அங்கு இதுவரை 700 ஏக்கர் பரப்பளவிலான திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. புதிதாக அமையவுள்ள 'அலூரா' பசுமை குடியிருப்புத் திட்டம், 'வெல்' சான்றிதழ் மற்றும் 'ஐஜிபிசி பிளாட்டினம்' முன்-சான்றிதழைப் பெற்றுள்ளது.


முந்தைய செய்தி
கரையைக் கடந்த முரசு புயல் - தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!
அடுத்த செய்தி
இனி வாட்ஸ் அப்பில் PF இருப்பு விவரம்

தொடர்புடைய செய்திகள்