Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கரையைக் கடந்த முரசு புயல் - தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

கரையைக் கடந்த முரசு புயல் - தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

நவம்பர் 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் நவம்பர் 8-ம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நவம்பர் 4 முதல் 8-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வங்கக்கடலில் உருவான முரசு தீவிர புயல், ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடற்கரையை நேற்று அதிகாலை கடந்தது. நெல்லூர்-நரசாபுரம் இடையே, ஓங்கோல் அருகே நேற்று அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணிக்குள் புயல் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அதன் தாக்கத்தால் தமிழகத்திலும் மழை தொடர வாய்ப்புள்ளது. இதன்படி, நவம்பர் 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 8-ம் தேதியும் கனமழை எச்சரிக்கை தொடர்கிறது.

சென்னையைப் பொறுத்தவரை, நவம்பர் 4-ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
முந்தைய செய்தி
முதல்வர் பயணத்திற்கும் இடைத்தேர்தலுக்கும் தொடர்பில்லை: வன்னி அரசு
அடுத்த செய்தி
ரூ.3,500 கோடியில் ஆடம்பர குடியிருப்புகள் - எங்கு தெரியுமா?

தொடர்புடைய செய்திகள்