Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஜியோ புள்ளிகளை டிஜிட்டல் தங்கமாக மாற்றலாம்

ஜியோ புள்ளிகளை டிஜிட்டல் தங்கமாக மாற்றலாம்

ஒரு ஜியோ புள்ளியின் மதிப்பு 25 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஜியோ பைனான்ஸ் செயலியில் சேகரிக்கும் வெகுமதிப் புள்ளிகளை டிஜிட்டல் தங்கமாக மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை ஜியோ பைனான்ஸ் பிளாட்பார்ம் அண்ட் சர்வீஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் முதல் நாள் தந்தேராஸ் என அழைக்கப்படுகிறது. 'தன்' என்றால் செல்வம், 'தேராஸ்' என்றால் 13-வது நாள். தந்தேராஸ் என்பது புதிய பொருட்களை வாங்கி, ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் வீட்டிற்குள் வரவேற்பதற்கான தொடக்க நாள். அட்சய திருதியை போல இந்நாளில் தங்கம், வெள்ளி நகைகள், நாணயங்கள் அல்லது புதிய பாத்திரங்கள் வாங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.


தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியின் மூலம், யுபிஐ பணப் பரிவர்த்தனை, கட்டணங்கள் செலுத்துதல் உள்ளிட்ட தகுதியான நிதிப் பரிவர்த்தனைகள் மூலம் கிடைக்கும் ஜியோ புள்ளிகளை 24 காரட் டிஜிட்டல் தங்கமாக மாற்றலாம். இதன்படி, ஒரு ஜியோ புள்ளியின் மதிப்பு 25 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 400 புள்ளிகளை தங்கமாக மாற்றி கொள்ளலாம். 

மாற்றப்படும் தங்கத்தின் அளவு, அப்போதைய சந்தை விலையின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள புள்ளிகளின் எண்ணிக்கையைப் பார்த்து, மாற்ற விரும்பும் புள்ளிகளைத் தேர்வு செய்து, அதற்கான தங்கத்தின் மதிப்பை உறுதி செய்துகொள்ளலாம். பரிவர்த்தனை முடிந்ததும் டிஜிட்டல் தங்கம் உடனடியாக ஜியோ கோல்டு கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்த வசதி ஜியோ பைனான்ஸ் பிளஸ் உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் நிதிச் சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வெகுமதிப் புள்ளிகள் மற்றும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்று ஜியோ பைனான்ஸ் பிளாட்பார்ம் அண்ட் சர்வீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
Airbus, Blue Angels to launch pilot training in India
அடுத்த செய்தி
community baby shower for 300 women in Tiruppur district

தொடர்புடைய செய்திகள்