Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

முதலீட்டாளர்களின் கவலைகள் பரிசீலிக்கப்படும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

முதலீட்டாளர்களின் கவலைகள் பரிசீலிக்கப்படும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பகிரவும் WhatsApp Facebook

பங்குச் சந்தை மதிப்பீடுகள், மூலதன ஆதாய வரி தொடர்பாக முதலீட்டாளர்கள் தெரிவிக்கும் கவலைகள் பரிசீலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பங்குகளின் அதிகப்படியான மதிப்பீடு, நீண்டகால மூலதன ஆதாய வரி ஆகியவை முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகளைத் திரும்பப் பெறுவதால், வரிச் சலுகைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


இந்நிலையில், மும்பையில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பங்குச் சந்தை நிலவரம், வெளிநாட்டு முதலீடு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:


சில்லறை முதலீட்டாளர்களின் கவலைகளை அரசு உணர்ந்துள்ளது. அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். இருப்பினும், வரிச் சலுகைகள் மட்டுமே பங்குச் சந்தையின் வளர்ச்சியைத் தீர்மானிப்பதில்லை. வலுவான பொருளாதார அடிப்படைகளும் முக்கியமானவை.
தற்போதுள்ள மூலதன ஆதாய வரி நடைமுறையிலேயே 2023-24-ம் ஆண்டில் அதிகளவில் வெளிநாட்டு முதலீடுகள் வந்தன. தற்போது சூழ்நிலைகள் மாறியுள்ளதால், அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதம் அல்லது அதற்கு மேல் நிலைநிறுத்துவது அவசியம். அதற்குப் போதுமான மூலதனம் தேவைப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்போது, உள்நாட்டு முதலீட்டாளர்களின் நலன்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் இளைஞர்களின் திறன் மேம்பாடு, தனியார் முதலீடுகளை அதிகரித்தல், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இளைஞர்களின் திறன்களுக்கும், நிறுவனங்களின் வேலைவாய்ப்புத் தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் உள்நாட்டு நுகர்வு வலுவடைந்துள்ளது. சந்தையில் தேவை அதிகரித்திருப்பதால் தனியார் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. தொழில் நிறுவனங்கள் அரசுடன் தொடர்ந்து கலந்துரையாடி, தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தெரிவிக்க வேண்டும்.
டாடா குழுமம் இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கம். அக்குழுமத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் நுட்பமான விவகாரம். அவை பொதுவெளியில் பெரிதாகாமல், சுமுகமாகத் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன். தற்போதைய நிலையில் அரசு தலையிட வேண்டிய அவசியம் இருப்பதாகக் கருதவில்லை.


தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், வரி செலுத்துவோர் மீதான நம்பிக்கையே அரசின் கொள்கை வகுப்பில் அடிப்படையாக இருக்கும். தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார்.

மறுபரிசீலனைக்கு வாய்ப்பு: எஸ்பிஐ


மும்பை:
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து தொடர்ந்து முதலீடுகளைத் திரும்பப் பெறுவதால், நீண்டகால மூலதன ஆதாய வரியை (எல்டிசிஜி) மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக எஸ்பிஐ தலைவர் சி.எஸ்.ஷெட்டி தெரிவித்துள்ளார். 

இந்த வரியை ரத்து செய்தால் அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என எஸ்பிஐ ஆய்வறிக்கை மதிப்பிட்டுள்ளது. இருப்பினும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வரி மறுபரிசீலனை உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை அரசு ஆராயக்கூடும் என்று அவர் கூறினார்.

முந்தைய செய்தி
Loyola Mani inspects Textbook Corporation Office
அடுத்த செய்தி
India, Denmark deepen clean energy cooperation

தொடர்புடைய செய்திகள்