Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பிரதமர் மோடி, முதல்வர் விஜய் தீபாவளி வாழ்த்து

பிரதமர் மோடி, முதல்வர் விஜய் தீபாவளி வாழ்த்து
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டில் பூஜை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி திருநாள் உற்சாகமாகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்திகளில் கூறியிருப்பதாவது:

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு: தீபாவளிப் பண்டிகை எதிர்மறைப் போக்குகளின் மீது நற்குணங்கள் பெறும் வெற்றியைக் குறிக்கிறது. இது துன்பங்களின் முடிவையும், மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்வின் தொடக்கத்தையும் உணர்த்துகிறது. இந்த நன்னாளில், மக்கள் மங்களகரமான தொடக்கத்துக்காகவும், நல்வாழ்வுக்காகவும் அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். ஒவ்வொரு குடிமகனுக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு கிடைக்க வாழ்த்துகிறேன். நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, நல்லிணக்கத்துடன் வாழ்வோம்.


பிரதமர் நரேந்திர மோடி: தீபங்களின் திருவிழா நாடு முழுவதையும் ஒளிரச் செய்து, இருளை வெல்லும் உறுதியைப் பிரதிபலிக்கிறது. இத்திருவிழாவும், வரவிருக்கும் காலங்களும் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவரட்டும். கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் நாட்டின் துணிச்சல் மிக்க பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் பாரம்பரியத்தை தொடர்வோம்.


முதல்வர் ஜோசப் விஜய்: இல்லந்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும். மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.


இந்நிலையில், பிரதமர் மோடி டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகைக்குச் சென்று, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதுடன், அங்கு பூஜை நடத்தினார்.



முந்தைய செய்தி
Coimbatore wholesale fish market clocks ₹6 crore sales in a day
அடுத்த செய்தி
அக்டோபரில் 15.621 கோடி இ-வே பில் உருவாக்கம்

தொடர்புடைய செய்திகள்