Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நறுவீ மருத்துவமனையில் ஆயிரமாவது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

நறுவீ மருத்துவமனையில் ஆயிரமாவது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
ஆயிரம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த டாக்டர் வெர்ணன் லீக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத்.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பெறும் நபர்கள் வழக்கமாக குணமடைய 3 மாதங்கள் ஆகும். ஆனால் இங்கு 2 மாதத்திலேயே குணமடையும் நிலை உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வேலூர் நறுவீ மருத்துவமனையில் நேற்று ஆயிரமாவது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டதாக மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையும், குணமடைந்தவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் பணியும் நறுவீ மருத்துவமனையின் மூலம் சிறப்பாக நடைபெறுகிறது.

மருத்துவமனையின் 6-வது ஆண்டு தொடங்கியுள்ளது. இதய சிகிச்சை, நுரையீரல், மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, குடல் நோய் சிகிச்சை, மூட்டு வலி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை உள்ளிட்ட பல விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, ஏராளமானோர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் இதயம், நுரையீரல், மண்ணீரல் ,கல்லீரல், சிறுநீரகம், கணையம், எலும்பு மஜ்ஜை , சிறு குடல் உள்ளிட்ட உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பெறும் நபர்கள் வழக்கமாக குணமடைய 3 மாதங்கள் ஆகும். ஆனால் இங்கு 2 மாதத்திலேயே குணமடையும் நிலை உள்ளது. மேலும், அமெரிக்க தயாரிப்பான கோரி ரோபோ மூலமும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் ஒரு மாதத்திலேயே குணமடையும் நிலை உள்ளது .

இந்த துறை தொடங்கப்பட்ட 5 ஆண்டுகளில் ஆயிரம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.

விரைவில் ரத்த புற்றுநோய் குணமடைவதற்கான எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம், குழந்தையின்மை போக்கும் வகையில் செயற்கை கருத்தரிப்பு மையம் சர்வதேச தரத்தில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
மின் ஆற்றல் சேமிப்புக்கு ரூ.14,500 கோடி ஒதுக்கீடு
அடுத்த செய்தி
CM plea to PM on Supreme Court Bench in Chennai

தொடர்புடைய செய்திகள்