Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மின் ஆற்றல் சேமிப்புக்கு ரூ.14,500 கோடி ஒதுக்கீடு

மின் ஆற்றல் சேமிப்புக்கு ரூ.14,500 கோடி ஒதுக்கீடு

தற்போது நாட்டில் உள்ள மின்சார சேமிப்புத் திறனைக் காட்டிலும் 170 சதவீதம் கூடுதல் திறனை உருவாக்கும் வகையில் இத்திட்டம் அமையும்.

பகிரவும் WhatsApp Facebook

நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை முழுமையாகப் பயன்படுத்துவதுடன், மின்சார விநியோகம் தடையின்றி இருப்பதை உறுதி செய்வதற்கு ரூ.14,500 கோடி மதிப்பிலான மின்சார ஆற்றல் சேமிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மின்சார சேமிப்புத் திட்டங்களுக்கான நிதி இடைவெளி நிரப்பும் (Viability Gap Funding - VGF) திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. 2026-27 முதல் 2030-31 வரையிலான ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 92 ஜிகாவாட் மின்சார சேமிப்புத் திறனை உருவாக்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.இதன்படி, 60 ஜிகாவாட் நீரேற்று மின் சேமிப்புத் திட்டங்களும் , 30 ஜிகாவாட் பேட்டரி மின்சார சேமிப்பு அமைப்புகளும் (BESS), 2 ஜிகாவாட் வளர்ந்து வரும் மாற்று சேமிப்புத் தொழில்நுட்பங்களும் உருவாக்கப்பட உள்ளன.இந்தத் திட்டங்கள் மூலம் சுமார் ரூ.97,600 கோடி முதலீடு ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது நாட்டில் உள்ள மின்சார சேமிப்புத் திறனைக் காட்டிலும் 170 சதவீதம் கூடுதல் திறனை உருவாக்கும் வகையில் இத்திட்டம் அமையும். 2031-32-ம் ஆண்டுக்குள் நாட்டுக்குத் தேவைப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ள 411 ஜிகாவாட் சேமிப்புத் திறனை எட்டவும் இது உதவும்.இத்திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் நிதி உதவி, சேமிப்புத் திட்டங்களின் நிதிச் சுமையைக் குறைத்து, தனியார் மற்றும் பொதுத்துறை முதலீடுகளை ஊக்குவிக்கும். மின்சார விநியோக நிறுவனங்கள் போட்டி அடிப்படையிலான ஒப்பந்த முறையில் இத்திட்டங்களுக்கான நிதியுதவியைப் பெறலாம்.


மேலும், பேட்டரி சேமிப்பு அமைப்புகளில் குறைந்தபட்சம் 40 சதவீத உள்நாட்டுப் பொருட்கள் பயன்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பேட்டரி உற்பத்தி அதிகரிப்பதுடன், இறக்குமதியைச் சார்ந்திருப்பதும் குறையும்.சூரிய மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி மாறுபடும் சூழலில், உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சேமித்து தேவையான நேரத்தில் பயன்படுத்த இத்திட்டம் உதவும். இதனால் மின்விநியோக நிலைத்தன்மை அதிகரிப்பதுடன், மரபுசார்ந்த மின் உற்பத்தியைச் சார்ந்திருப்பதும் குறையும். நாளின் 24 மணி நேரமும் தடையற்ற, மலிவான மின்சாரம் வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்க இது முக்கிய உந்துதலாக அமையும்.

பிற ஒப்புதல்கள்..

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ வழக்குகளை விரைந்து விசாரிக்க செயல்படும் விரைவு சிறப்பு நீதிமன்றத் திட்டம், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.3,788.04 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது செயல்படும் 779 நீதிமன்றங்கள் 850 ஆக உயர்த்தப்பட உள்ளன.


மேலும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிவரங்களை நவீனமயமாக்கும் விஸ்தார் (VISTAR) திட்டத்துக்கு ரூ.4,371.10 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஏஐ, டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தரவுகளைச் சேகரித்து ஆய்வு செய்வதுடன், எட்டாவது பொருளாதாரக் கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது.

முந்தைய செய்தி
குட்கா வழக்கில் சாட்சி விசாரணை எப்போது தொடங்கும்? - நீதிமன்றம் கேள்வி
அடுத்த செய்தி
நறுவீ மருத்துவமனையில் ஆயிரமாவது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

தொடர்புடைய செய்திகள்