Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

குட்கா வழக்கில் சாட்சி விசாரணை எப்போது தொடங்கும்? - நீதிமன்றம் கேள்வி

குட்கா வழக்கில் சாட்சி விசாரணை எப்போது தொடங்கும்? - நீதிமன்றம் கேள்வி

சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி என்.லோகேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

பகிரவும் WhatsApp Facebook

குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது தொடங்கப்படும் என சிபிஐ தரப்புக்கு, எம்.பி.- எம்எல்ஏக்கள் மீதான சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்க அனுமதித்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என, மொத்தம் 25 பேருக்கு எதிராக, சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி என்.லோகேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா மற்றும் முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட 24 பேர் ஆஜராகினர். முன்னாள் டிஜிபி டி.கே. ராஜேந்திரன் ஆஜராகவில்லை. அவர் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை மூன்று மாதத்தில் எவ்வாறு முடிக்கப்படும் என உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. அதனால் சாட்சி விசாரணை எப்போது தொடங்கப்படும். எப்போது ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் என சிபிஐ தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கின் விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, விசாரணைக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பிலிருந்து முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்
முந்தைய செய்தி
TRAI launches Anubhav platform to map telecom network quality
அடுத்த செய்தி
மின் ஆற்றல் சேமிப்புக்கு ரூ.14,500 கோடி ஒதுக்கீடு

தொடர்புடைய செய்திகள்