Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விசைத்தறி துறைக்கு தனி அமைச்சகம் தேவை:

விசைத்தறி துறைக்கு தனி அமைச்சகம் தேவை:

விசைத்தறித் துறையை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையின் கீழ் கொண்டுசென்றால் இலவச மின்சாரச் சலுகை கிடைக்காது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் சுமார் 75,000 விசைத்தறிகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விசைத்தறித் துறைக்கு எனத் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்று சேலம் மண்டல குமரன் விசைத்தறி நெசவாளர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்க செயலாளர் கலைவாணன் கூறியதாவது:

தற்போது கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறையின் கீழ் விசைத்தறித் துறை இருந்தாலும், அத்துறை பெரும்பாலும் கைத்தறி, ஜவுளிப் பூங்காக்கள், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது. விசைத்தறித் துறையின் பிரச்னைகள் போதிய கவனம் பெறுவதில்லை.

விசைத்தறித் துறையில் தானியங்கி, ஷட்டில் தறிகள், சாதாரண ரேப்பியர் தறிகள் உள்ளன. மற்ற விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் 1,000 யூனிட் இலவச மின்சாரம் ரேப்பியர் தறிகளுக்கு வழங்கப்படுவதில்லை. மற்ற தறிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் உயர்ந்த மின் கட்டணத்தைக் கருத்தில் கொள்ளும்போது போதுமானதாக இல்லை.

விசைத்தறித் துறையை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையின் கீழ் கொண்டுசென்றால் இலவச மின்சாரச் சலுகை கிடைக்காது. எனவே, தனி அமைச்சகம் அமைப்பதே பொருத்தமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
அடுத்த செய்தி
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடியில் மடிக்கணினி

தொடர்புடைய செய்திகள்