Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடியில் மடிக்கணினி

கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடியில் மடிக்கணினி

கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 2000 கோடி மதிப்பீட்டில் மடிக்கணினிகள் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 2000 கோடி மதிப்பீட்டில் மடிக்கணினிகள் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வெற்றி மடிக்கணினித் திட்டத்தின் மூலம் 2026-27 ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ, மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம், வேளாண்மை மற்றும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்விப் பிரிவுகளில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு மாணவர்கள் பயனடைவார்கள்.


மேலும், முந்தைய கல்வியாண்டில் மடிக்கணினித் திட்டத்தில் பயனடையாத அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மூன்றாவது மற்றும் நான்காம் ஆண்டு தொழில்முறை படிப்பு மாணவர்களும் தற்போதைய இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.


பொறியியல் மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வித் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு Intel Core i5 அல்லது அதற்கு இணையான உயர்தரத் தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணினிகள் வழங்கப்படும்.


இத்திட்டத்தை கண்காணித்து, தொய்வின்றிச் செயல்படுத்திட முதல்வர் தலைமையில் உயர்மட்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படவுள்ளது. மேலும், தரக்கட்டுப்பாட்டுடன் கூடிய மடிக்கணினிகளைக் கொள்முதல் செய்வதை உறுதிசெய்ய தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முந்தைய செய்தி
விசைத்தறி துறைக்கு தனி அமைச்சகம் தேவை:
அடுத்த செய்தி
அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்