Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு

அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு

மே 1 முதல் 2026 மார்ச் 31 வரை பெறப்பட்ட பயிர்க் கடன்கள் கீழ் தள்ளுபடி செய்யப்படும்.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே 1 முதல் 2026 மார்ச் 31 வரை பெறப்பட்ட பயிர்க் கடன்கள் கீழ் தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் சுமார் 13.25 லட்சம் விவசாயிகள் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்கும் நோக்கில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி வழங்கும் திட்டத்தை அரசு விரிவுபடுத்தியுள்ளது. இதன்படி, ரூ.75,000 வரை பயிர்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கு அசல் மற்றும் வட்டி உட்பட முழு கடனும் தள்ளுபடி செய்யப்படும். ரூ.75,000-க்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 தள்ளுபடி வழங்கப்படும்.

 மீதமுள்ள கடன் தொகையை விவசாயிகள் செலுத்த வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் ரூ.75,000 வரை கடன் பெற்ற 5,90,621 விவசாயிகள், அதற்கு மேல் கடன் பெற்ற 7,34,260 விவசாயிகள் என மொத்தம் 13,24,881 பேர் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறைகளை செயல்படுத்த கூட்டுறவு துறை மூலமாக நவ. 6-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


முன்னதாக, கடந்த மே மாதத்தில் குறு மற்றும் சிறு விவசாயிகள் பெற்ற ரூ.50,000 வரையிலான பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யும் திட்டத்தை அரசு அறிவித்தது. விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, ஜூன் மாதத்தில் ரூ.75,000 வரையிலான கடன்களுக்கு முழு தள்ளுபடியும், அதற்கு மேற்பட்ட கடன்களுக்கு ரூ.35,000 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது.

 பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் கடன் தள்ளுபடி வரம்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணை மூலம், ரூ.75,000-க்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 தள்ளுபடி வழங்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்காக ரூ.9,062.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2026–2027-ம் நிதியாண்டில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.2,842.77 கோடி கூடுதல் நிதிக்கு அரசாணை மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பயிர்க்கடன் தள்ளுபடி – முக்கிய விவரங்கள்

ரூ.9,062.83 கோடி - மொத்த நிதி ஒதுக்கீடு

13.25 லட்சம்- பயனாளிகள் எண்ணிக்கை

ரூ.75,000- அதிகபட்ச தள்ளுபடி

ரூ.2,842.774 கோடி- 2026–27 நிதியாண்டுக்கான கூடுதல் ஒதுக்கீடு


முந்தைய செய்தி
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடியில் மடிக்கணினி
அடுத்த செய்தி
1,225 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட விலை அமல் - விவரம்

தொடர்புடைய செய்திகள்