Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

1,225 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட விலை அமல் - விவரம்

1,225 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட விலை அமல் - விவரம்

1,031 மருந்துக் கலவைகளில் அதிகபட்ச சில்லறை விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நாடு முழுவதும் 1,225 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் திருத்தப்பட்ட விலை (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வருவதாக ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நுகர்வோருக்கு ஆண்டுதோறும் ரூ.3,500 கோடிக்கும் அதிகமான சேமிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்புரிமை காலம் முடிவடைந்த புற்றுநோய் மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) திருத்தி அறிவித்துள்ளது. அதன்படி, 137 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையின் (MRP) மீதான வர்த்தக லாப வரம்புகள் நிர்ணயித்துள்ளது. இந்த மருந்துகளின் திருத்தப்பட்ட விலை நவ.9ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை 76 மருந்து நிறுவனங்கள் 121 மருந்துகளை உள்ளடக்கிய 1,225 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துக் கலவைகளுக்கான திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை அறிவித்துள்ளன. புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் 1,031 மருந்துக் கலவைகளில் அதிகபட்ச சில்லறை விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 600 பிராண்டுகள் 50 சதவீதத்துக்கும் அதிகமான குறைப்பை அறிவித்துள்ளன.


மேலும், அதிகபட்ச குறைப்பு 96.45 சதவீதமாக உள்ளது. உதாரணமாக ஸைடஸ் லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் பிரிக்ஸ்டா மருந்து ரூ.25,995-லிருந்து ரூ.3,318-ஆக குறைந்துள்ளது. ரிலையன்ஸ் லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் பெவாசிரெல் மருந்து ரூ.24,079-லிருந்து ரூ.3,985-ஆக குறைந்துள்ளது.


மேலும், அடையாளம் காணப்பட்ட 137 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளில், 10-15 மருந்துகள் இன்னும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. எனினும், இந்த மருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்போது, அவற்றுக்கும் வர்த்தக லாப வரம்பு சீரமைப்பு (TMR) பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு
அடுத்த செய்தி
அமெரிக்காவில் புதிய கிளையை திறந்த பாரத ஸ்டேட் வங்கி

தொடர்புடைய செய்திகள்