Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அமெரிக்காவில் புதிய கிளையை திறந்த பாரத ஸ்டேட் வங்கி

அமெரிக்காவில் புதிய கிளையை திறந்த பாரத ஸ்டேட் வங்கி

எஸ்பிஐ 56 நாடுகளில் உள்ள 222 நிதி நிறுவனங்களுடன் தொடர்பு வங்கி ஏற்பாடுகளையும் பராமரிக்கிறது.

பகிரவும் WhatsApp Facebook

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் வடக்கு டல்லாஸ் பகுதியில் உள்ள ஃபிரிஸ்கோவில் பகுதியில் புதிய கிளையைத் திறந்துள்ளது.

வங்கித் தலைவர் சல்லா ஸ்ரீனிவாசலு செட்டி வங்கிக் கிளையை திறந்து வைத்தார். அவர் கூறியதாவது: புதிய கிளையால் அமெரிக்காவில் செயல்படும் எஸ்பிஐ கிளைகளின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. டல்லாஸ் பகுதி முக்கிய வர்த்தக மையமாக விளங்குவதால், கிளை அமைக்க இந்நகரத்தை தேர்ந்தெடுத்துள்ளோம். 


சில்லறை வைப்புத்தொகைகள், வணிகக் கடன்கள், உலகெங்கிலும் உள்ள பணப் பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சிறப்புச் சேவைகளைக் கையாள்வதற்காக இந்தக் கிளை அமைக்கப்பட்டுள்ளது.


எஸ்பிஐ வங்கி 29 நாடுகளில் 245 அலுவலகங்களைக் கொண்டுள்ளது. எல்லை தாண்டிய வர்த்தகத் தீர்வுகள் மற்றும் பணம் செலுத்தும் பரிமாற்றங்களுக்கு ஆதரவளிக்க, எஸ்பிஐ 56 நாடுகளில் உள்ள 222 நிதி நிறுவனங்களுடன் தொடர்பு வங்கி ஏற்பாடுகளையும் பராமரிக்கிறது.


அண்மையில் முடிவடைந்த காலாண்டில், வெளிநாட்டுக் கடன்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22.86 சதவீதம் அதிகரித்து, ரூ. 8,31,332 கோடியாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், வெளிநாட்டுக் கிளைகளில் வைப்புத்தொகை திரட்டல் 22.61 சதவீதம் அதிகரித்து, ரூ. 2,83,319 கோடியை எட்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
1,225 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட விலை அமல் - விவரம்
அடுத்த செய்தி
'Elon Musk rejects Cybertruck unprofitability claims'

தொடர்புடைய செய்திகள்