Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சார்பதிவாளர் அலுவலகத்தில் ஜிபே முறையில் லஞ்சம்

சார்பதிவாளர் அலுவலகத்தில் ஜிபே முறையில் லஞ்சம்

டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் 6 பேர் குழுவினர் நேற்று முன்தினம் மாலை சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனையில் நடத்தினர்.

பகிரவும் WhatsApp Facebook

திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் கருங்கல்மேடு சாலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில், அலுவலக பணியாளர்களின் ஜி-பே கணக்குகளில் ரூ.6.82 லட்சம் கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் 6 பேர் குழுவினர் நேற்று முன்தினம் மாலை சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனையில் நடத்தினர். சார்பதிவாளர் ராமதிலகம் இந்த அலுவலகத்தில், 6 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனை இரவு 11 மணி வரை நீடித்தது. 

இந்த சோதனையின் போது, சார்பதிவாளர் ராமதிலகத்தின் ஜி-பே கணக்கில் ரூ.2,21,540, இரண்டு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களின் கணக்குகளில் ரூ.3,21,910 ஜூனியர் அசிஸ்டன்ட் கணக்கில் ரூ.1,38,755 என மொத்தம் ரூ.6,82,205 மதிப்பிலான கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி
US midterms unlikely to disrupt AI investment boom
அடுத்த செய்தி
ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிகர லாபம் 15% உயர்வு

தொடர்புடைய செய்திகள்