Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிகர லாபம் 15% உயர்வு

ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிகர லாபம் 15% உயர்வு

12.5 சதவீதம் அதிகரித்து ரூ.645.43 கோடியை எட்டியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டு அடிப்படையில் 15.12 சதவீதம் அதிகரித்துள்ளது.


தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னாலஜிஸ், செப்டம்பர் காலாண்டில் தங்களது ஒருங்கிணைந்த நிகர லாபம் 15.12 சதவீதம் அதிகரித்து ரூ.62.19 கோடியாக உயர்ந்துள்ளதாகப் பங்குச்சந்தை ஒழுங்குமுறைத் தாக்கலில் தெரிவித்துள்ளது.


 மேலும், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.54.02 கோடியாக இருந்த இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய், தற்போது 12.5 சதவீதம் அதிகரித்து ரூ.645.43 கோடியை எட்டியுள்ளது.

 இதனிடையே, இந்நிறுவனம் ஐடிசி இன்ஃபோடெக் உடன் இணையவுள்ள நிலையில், இதன் நிறுவனரான அசோக் சூட்டாவிடமிருந்து 22.10 சதவீத பங்குகளை ஐடிசி நிறுவனம் கையகப்படுத்த உள்ளது. 

மேலும், தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.3.05 இடைக்கால ஈவுத்தொகையையும் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான பதிவுத் தேதி நவம்பர் 6 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஈவுத்தொகை நவம்பர் 17 அன்று வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
சார்பதிவாளர் அலுவலகத்தில் ஜிபே முறையில் லஞ்சம்
அடுத்த செய்தி
மல்லிகைப்பூ விலை கடும் சரிவு

தொடர்புடைய செய்திகள்