Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தேங்காய் வரத்து அதிகரிப்பு: விலை ரூ.4 வரை சரிவு

தேங்காய் வரத்து அதிகரிப்பு: விலை ரூ.4 வரை சரிவு

இந்த ஏலத்துக்கு மொத்தம் 15,810 தேங்காய்கள் வரத்தாகின. ஒரு தேங்காய் குறைந்தபட்சம் ரூ.13-க்கும், அதிகபட்சம் ரூ.32-க்கும் விற்பனையானது.

பகிரவும் WhatsApp Facebook

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில், கடந்த வாரத்தைக் காட்டிலும் வரத்து அதிகரித்ததால் ஒரு தேங்காய்க்கு ரூ.4 வரை விலை குறைந்தது.

இந்த ஏலத்துக்கு மொத்தம் 15,810 தேங்காய்கள் வரத்தாகின. ஒரு தேங்காய் குறைந்தபட்சம் ரூ.13-க்கும், அதிகபட்சம் ரூ.32-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.3.37 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனையாகின. இதே சங்கத்தில் வாழைத்தார் ஏலமும் நடைபெற்றது. இதில் கதளி ரகம் கிலோ ரூ.27 முதல் ரூ.60 வரையிலும், நேந்திரன் ரகம் கிலோ ரூ.29 முதல் ரூ.56 வரையிலும் விற்பனையானது.

வாழைத்தார்களில் செவ்வாழை ரூ.230 முதல் ரூ.860 வரையிலும், தேன்வாழை ரூ.160 முதல் ரூ.560 வரையிலும், பூவன் ரூ.170 முதல் ரூ.510 வரையிலும், ரஸ்தாளி ரூ.220 முதல் ரூ.530 வரையிலும், மொந்தன் ரூ.150 முதல் ரூ.530 வரையிலும், ரொபஸ்டா ரூ.170 முதல் ரூ.560 வரையிலும், பச்சைநாடன் ரூ.160 முதல் ரூ.510 வரையிலும் விற்பனையானது.

மொத்தம் 5,670 வாழைத்தார்கள் வரத்தாகி, ரூ.8.60 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையாகின. ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று வாழைத்தார்களை வாங்கிச் சென்றனர்.

முந்தைய செய்தி
பணத்தை (பற்றி) எண்ணுவோம்!
அடுத்த செய்தி
Elon Musk acknowledges Democrat wave

தொடர்புடைய செய்திகள்