Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கொடைக்கானல் சாலையில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு

கொடைக்கானல் சாலையில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு
கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த 12 மீட்டர் நீள வாகனங்கள்.

12 மீட்டருக்கு குறைவான நீளமுள்ள பயணியர், சரக்கு வாகனங்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாக போக்குவரத்து விதிகளில் மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

அதன்படி, 12 மீட்டர் நீளத்திற்கும் அதிகமாக உள்ள வால்வோ உள்ளிட்ட பயணியர் பேருந்துகள், மற்றும் சரக்கு பொருட்கள் கொண்டு செல்லும் லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய சாலைகளான காட்ரோடு, அய்யம்பாளையம், சித்தரேவு – தாண்டிக்குடி, தருமத்துப்பட்டி – பன்றிமலை – மணலூர் – தாண்டிக்குடி, ஒட்டன்சத்திரம் - பாச்சலூர், பழனி - சவரிக்காடு – வடகவுஞ்சி, பெரியகுளம் கும்பக்கரை பிரிவு – அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலைகளில் இந்த தடை விதிக்கப்படுகிறது. 

இந்த வழித்தடங்களில் 12 மீட்டருக்கு குறைவான நீளமுள்ள பயணியர் மற்றும் சரக்கு வாகனங்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல் மலை பகுதியில் 12 மீட்டருக்கு அதிகமாக உள்ள வாகனங்கள் செல்ல கூடாது என்ற ஆணை ஏற்கனவே நடைமுறையில் இருந்தும், இந்த உத்தரவு பின்பற்றப்படாததால் இதனை கடுமையாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முந்தைய செய்தி
தீபாவளி பண்டிகை: 26,856 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
அடுத்த செய்தி
இஸ்ரேலில் கூட்டணி பேரம் தீவிரம் - ஆட்சி அமைப்பதில் இழுபறி

தொடர்புடைய செய்திகள்