Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தீபாவளி பண்டிகை: 26,856 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகை: 26,856 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வெளியூரில் இருந்து சென்னை திரும்ப மொத்தம் 11,197 பேருந்துகள் இயக்கப்படும். தனியார் பேருந்துகளும் ஒப்பந்த முறையில் இயக்கப்படும்.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளியூர்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வசதிகள், சிறப்பு ஏற்பாடுகள், சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்து துறை சார்பில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில், துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துறைச் செயலர் இல.நிர்மல்ராஜ், ஆணையர் சிகி தாமஸ் வைத்தியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாகளர்களிடம் அமைச்சர் பேசுகையில், ‘‘தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு பயணிகள் வசதியாக பயணம் மேற்கொள்ளும் வகையில் சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு நவ.5 முதல் நவ.7 வரை சிறப்புப் பேருந்துகள் உட்பட 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதேபோல், வெளியூரில் இருந்து சென்னை திரும்ப மொத்தம் 11,197 பேருந்துகள் இயக்கப்படும். தனியார் பேருந்துகளும் ஒப்பந்த முறையில் இயக்கப்படும்.
வழக்கம் போல் பேருந்துகள் கிளாம்பாக்கம், மாதாவரம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

புகார் தெரிவிக்க...


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ளவும், குறைகள் மற்றும் புகார்கள் தெரிவிக்கவும் செல்பேசி:94450 14436,
கட்டணமில்லா தொலைபேசி எண்:149 எண்களை 24x7 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 93848 08333 என்ற whatsapp எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.


முந்தைய செய்தி
செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் லாபம் 46% உயர்வு
அடுத்த செய்தி
கொடைக்கானல் சாலையில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு

தொடர்புடைய செய்திகள்