Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பழைய துணிகள் தேக்கம்; நிதி நெருக்கடியில் விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள்

பழைய துணிகள் தேக்கம்; நிதி நெருக்கடியில் விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள்

கடந்த திமுக ஆட்சியில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகளுக்கான நூல் கொள்முதல் செலவை கூட்டுறவுச் சங்கங்களே ஏற்றுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

விற்பனையாகாத பழைய துணிகள் தேக்கம் மற்றும் பொங்கல் பண்டிகைக்காக புதிய வடிவமைப்பிலான வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான கூடுதல் செலவு ஆகியவற்றால் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதாக விசைத்தறி கூட்டுறவுச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள் பெரும்பாலும் இலவச வேட்டி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான சீருடைத் துணி உற்பத்தியையே நம்பியுள்ளனர். ஆனால், பல கூட்டுறவு சங்கங்களில் ரூ.10 கோடிக்கும் அதிகமான பழைய துணிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளதாக செங்கொடி உழைப்பாளர் சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.மனோகரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி விநியோகிக்கப்பட உள்ள 1.77 கோடி வேட்டிகள், 1.77 கோடி சேலைகளுக்கு புதிய வடிவமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், சிறிய நெசவாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. புதிய வடிவமைப்புகளுக்கு ஏற்ப துணிகளை உற்பத்தி செய்வதற்காக தறிகளில் சில பாகங்களை மாற்றுவதற்கு சுமார் ரூ.10,000 வரை செலவிட வேண்டியுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகளுக்கான நூல் கொள்முதல் செலவை கூட்டுறவுச் சங்கங்களே ஏற்றுள்ளன. ஆனால், பழைய வடிவமைப்பிலான துணிகளை அரசு கொள்முதல் செய்ய மறுத்துவிட்டதால், அவற்றை வேறு சந்தைகளிலும் விற்பனை செய்ய முடியாமல் சங்கங்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன. 

எனவே, தேக்கமடைந்துள்ள பழைய துணிகளைக் கொள்முதல் செய்யவும், கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிதியுதவி வழங்கவும், சிறிய நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1,800 இலக்கு
அடுத்த செய்தி
லாபம் உயர்ந்தும் Thermax பங்கு கடும் சரிவு

தொடர்புடைய செய்திகள்